அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டுப் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும். தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நாளை 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலகர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.. அப்போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதன்பின்னர் வழக்கை பட்டியலிட வேண்டும்.. என்று தமிழக அரசு வாதிட்டது.. அதன்படி, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன், வரும் 17-ம் தேதி, தலைமை செயலாளர், மதுரை மாநகர […]

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி கிடையாது.. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.. அதற்காக புதுச்சேரி முதல்வருக்கு […]

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியில் இணைந்த கையோடு தற்போது முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் வேகத்துடன் செங்கோட்டையன் செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் செங்கோட்டையன் சொந்த அண்ணன் மகனும் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான கே […]

பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என பல கட்சிகளில் இருந்தவர்.. ஆனால் சில ஆண்டுகளாக எந்த கட்சியிலும் இல்லாமல் திராவிட கொள்கைகளை பற்றி பேசி வந்தார்.. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் கடந்த விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.. மதிமுக, அதிமுக, திமுகவை தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பத் இணைந்தார்.. அவருக்கு தவெகவின் பரப்புரைச் […]

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. பாஸ் வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட மைதானத்திற்கு உள்ளே நுழைந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.. மேலும் லேசான தடியடியும் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.. பின்னர் […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,95,03,855 கணக்கெடுப்பு படிவங்கள் […]