கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார். கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்’ கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம், கடந்த 2023 செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும், இது மகளிரின் […]

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு […]

சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவு. கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதுகுறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்தது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சீமான், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் […]

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அடுத்தடுத்து மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, சில நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டாலும், கட்சி மீதான மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்ற […]