ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. […]

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. “வேறு வழக்கில் கைது செய்யப்பட மாட்டேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே நேரில் ஆஜராக முடியும்” என போலீசாருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஜாமீன் விதிகளின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் தினமும் காலை, […]

சென்னை மற்றும் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 10, 2026) மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை தற்காலிக அரசு வேலை வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி தீரன் திருமுருகன் மற்றும் சீனி […]

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று கரூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இதனால் இந்நிகழ்ச்சிக்கு வருவோரிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அதன் பின், 285 நாட்களுக்குப் பிறகு கரூருக்கு முதல்வராக விஜய் […]

வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் விரைவாக கிடைக்க புதிய நடைமுறையை வருவாய் துறை பரிசீலித்து வருகிறது. முழு விவரங்கள் இங்கே. வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பொதுமக்கள் விரைவாக பெறும் வகையில், வருவாய் துறை நிர்வாக நடைமுறையில் மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், சான்றிதழ்கள் வழங்கப்படும் காலம் கணிசமாக குறையக்கூடும்.அரசின் நலத்திட்டங்கள், கல்வி சேர்க்கை, வேலைவாய்ப்பு, […]

தவெக தலைமையிலான கூட்டணி உருவானால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேசமயம், திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக தாம் அறிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன், தனது அரசியல் நிலைப்பாட்டிற்கென எப்போதும் ஒரு நேர்மை இருக்கிறது. வெறும் பதவி, புகழ் அல்லது தனிப்பட்ட பலன்களுக்காக அரசியல் முடிவுகளை […]

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. […]

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இதனால் தமிழ் நாட்டிற்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மற்றும் காற்று அழுத்த மாற்றங்களால் உலகளாவிய வானிலை முறைகளை மாற்றியமைக்கும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். இது பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. பசிபிக் பெருங்கடலில் […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்லுவதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகள் அனைத்திலும் சோதனை நடைபெறும். பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு அல்லது கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு வைப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் […]