மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணியின் இஸ்ஸி வோங் பெற்றார். மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் எலிமினேட்டர் சுற்று, மும்பையில் நடைபெற்றது. இதில், உ.பி. வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் […]

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா அளவை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஆறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மூன்று மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் இருந்து […]

பதப்படுத்தப்படாத பாலை கர்ப்பிணிகள் குடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் நோய்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளவேண்டிய பானங்கள் குறித்து பார்க்கலாம். கர்ப்பக்காலங்களில் பெண்கள் தனது ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி உணவு பழக்கங்களை கையாளவேண்டும். குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகளையும் கவனத்துடன் எடுத்துகொள்வது அவசியமாக உள்ளது. அந்தவகையில் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மது பானங்களை எடுத்துக்கொள்வது, […]

மாதவிடாய் காலத்தில் டேம்பான்ஸ் பயன்படுத்துவதால் டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் என்னும் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டேம்பான்ஸ் என்பது மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நேப்கின், மென்ஸ்சுரல் கப் போன்ற ஒரு பொருள் தான். பெண்ணுறுப்பின் உள்ளே இதைப் பொருத்துவதன் மூலமாக உதிரப்போக்கை அது உறிஞ்சிக் கொள்கிறது.மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய மற்ற பொருட்களைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலான பலன்கள் இந்த டேம்பான்ஸ் பயன்பாட்டில் உண்டு. அதாவது, இதைப் […]

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டீஸ் பணிகளில் 5000 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தற்போது அந்த நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் 230 […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வழங்க மத்திய அரசு ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை 01.01.2023 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் தவணையானது விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 38% ஐ விட 4% அதிகமாகும். அகவிலைப்படி மற்றும் அகவிலை […]

மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சகம் 2 உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்துகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உதவித்தொகை திட்டம் அதில் ஒன்றாகும். மற்றொன்று பேகம் ஹசரத் மஹல் திட்டமாகும். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் பிரதமரின் கல்வி அதிகாரம் அளித்தல் […]

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன், லோவ்லினா போர்கோஹைன், நீது கங்காஸ் மற்றும் ஸ்வீட்டி பூரா நுழைந்துள்ளனர். தங்கப்பதக்கத்தை தட்டிச்செல்வார்களா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் டெல்லியில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் நான்கு தங்கப்பதக்கம் கிடைக்கும். நான்கு இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன் (50 கிலோ), லோவ்லினா […]

இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், பல துறை அமைச்சகங்கள், துறைகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள் மற்றும் தொழில் துறையினர் ஆகியோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு […]

AI தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டும் 45 ஆயிரம் வேலை வாய்ப்பு உள்ளது என TeamLease Digital என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்தநிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) மயமாக்கப்பட்ட உலகில் தற்போது அதன் பயனும் அதிகரித்துவரும் வேளையில் அதற்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன்படி இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பாக தரவு விஞ்ஞானிகள் மற்றும் இயந்திர கற்றல் (ML) பொறியாளர்கள் […]