பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். உலகம் முழுவதும் இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கும்போது, அது நாளடைவில் கட்டி அல்லது புற்றுநோயாக மாறக்கூடும். மார்பக புற்றுநோய் வருவதற்கு வயது, மரபணு காரணங்கள், குடும்ப வரலாறு போன்ற சில காரணிகளை மாற்ற முடியாது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை […]

யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரூ. 2,000 தொகைக்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை கட்டணம் (MDR) விதிக்க அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டத் திருத்த மசோதாவில், மின்னணுப் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகளும் சேவை நிறுவனங்களும் கட்டணம் […]

தலைவலி என்பது பலரும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை. மன அழுத்தம், தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவு, நீண்ட நேரம் செல்போன் அல்லது கணினி பயன்படுத்துவது, நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். தலைவலி வந்தவுடன் பலரும் உடனடியாக ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பார்கள். காபியில் இருக்கும் கஃபைன் தலைவலியை குறைக்குமா அல்லது மாறாக தலைவலியை அதிகரிக்குமா என்ற […]

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் […]

இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்ய ஸ்டென்ட் (Heart Stent) பொருத்துவது பொதுவான சிகிச்சை முறையாகும். ஆனால், “ஒருமுறை ஸ்டென்ட் பொருத்திவிட்டால் இனி வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வராது” என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான நம்பிக்கை என்று இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்டென்ட் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. ஆனால், இதய நோயை முழுமையாக குணப்படுத்தாது என்பதே உண்மை. இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் […]

உடல் கட்டு (Bodybuilding) என்றாலே பலருக்கு வலிமை, ஆரோக்கியம், உடற்தகுதி என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சமீப காலமாக இளம் வயது பாடி பில்டர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியமும் அதே அளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவங்கள் மீண்டும் நினைவூட்டுகின்றன. சமீபத்தில் பிரேசிலைச் சேர்ந்த பிரபல ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் ஒருவர், ஜிம்மில் எடுத்த […]

கிராமப்புறங்களில் முருங்கை மற்றும் வேப்ப மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகள் காரணமாக பலர் தங்கள் வீடுகளில் இருந்த முருங்கை மரங்களை வெட்டி அகற்றும் சூழல் உருவானது. குறிப்பாக, முருங்கை மரத்தில் பேய், பிசாசுகள் குடியிருக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் உச்சம் தொட்டு வரும் இக்காலகட்டத்திலும், பில்லி சூனியம் மற்றும் பேய் சார்ந்த […]

நமது முன்னோர்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்த பல வாழ்க்கை முறைகளுக்கு பின்னால் ஆழமான அனுபவ அறிவும், ஆரோக்கியக் கோட்பாடுகளும் நிறைந்துள்ளன. அந்த வகையில், தரையில் அமர்ந்து உணவருந்தும் வழக்கம் வெறும் பாரம்பரிய அடையாளம் மட்டுமல்லாமல், உடலியல் ரீதியாக பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. தரையில் சம்மணமிட்டு, சுகாசனம் போன்ற நிலையில் அமர்ந்து சாப்பிடும் போது, முதுகெலும்பு இயல்பாகவே நேராக நிமிர்கிறது. உணவை எடுத்து உண்பதற்காக முன்னும் பின்னும் லேசாக குனியும் அசைவுகள், […]

குறைந்த செலவில் அதிக புரதச்சத்து (Protein) கிடைக்கும் உணவுகளைத் தேடுபவர்களுக்கு சோயா சங்க்ஸ் (Soya Chunks) சிறந்த தேர்வாகும். உடற்பயிற்சி செய்பவர்கள், சைவ உணவு உண்பவர்கள், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் என பலரும் இதை தங்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். புரதச்சத்து மட்டுமல்லாமல், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. சோயா சங்க்ஸை வைத்து சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்யக்கூடிய சில எளிய […]