மன அழுத்தம், உறவுகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கை குறித்த குழப்பங்களுக்கு மத்தியில், தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளும் முயற்சியில் பலரும் சுய சிந்தனை முறைகளை நாடுகின்றனர். அந்த வகையில், ஜப்பானில் பின்பற்றப்படும் ‘Naikan’ என்ற சுயபரிசோதனை முறை தற்போது கவனம் பெற்று வருகிறது. நன்றியுணர்வு, தனிப்பட்ட பொறுப்பு மற்றும் உறவுகளின் மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறை, ஒருவரின் செயல்கள் மற்றும் பிறருடனான உறவுகளை ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது. […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
சீனாவை உலகளவில் முன்னணி பொருளாதார வல்லரசாக கட்டியெழுப்பிய முன்னாள் பிரதமரும், “பொருளாதாரத்தின் இரும்பு மனிதர்” என்று போற்றப்பட்டவருமான ஜூ ரோங்ஜி (97) உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் காலமானார். 1998 முதல் 2003 வரை பிரதமராக இருந்த இவர், சீனாவை சந்தைப் பொருளாதாரப் பாதைக்கு திருப்பி, வறுமையைக் குறைத்து, பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்த முதன்மை சிற்பியாவார். அரசு அதிகாரிகள் சலுகைகளை எதிர்பார்க்காமல், மக்கள் சேவகர்களாக உண்மை பேச வேண்டும் என வலியுறுத்திய […]
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்த்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த […]
வங்கி துறையில் அரசு வேலைக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜூனியர் அசோசியேட் (Customer Support and Sales) பணியிடங்களுக்கு பெரிய அளவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,766 பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் 7,680 வழக்கமான பணியிடங்களும், 2,086 பின்னடைவு பணியிடங்களும் அடங்குகின்றன. இதற்கான ஆன்லைன் […]
சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் சிறுநீர் அதிகம் செறிவடைவது முக்கியமான ஆபத்து காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உடலில் சேரும் சில தாதுக்கள் சிறுநீரில் அதிக அளவில் குவியும்போது, அவை படிப்படியாக படிகங்களாக மாறி கற்களாக உருவாகலாம். இதனால், அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீர்ச்சத்து […]
திருமண வாழ்க்கையில் ஒருவர் வேறு ஒரு நபருடன் உறவு வைத்திருப்பது என்பது திடீரென நிகழும் ஒரு சம்பவமாக மட்டுமே பார்க்க முடியாது. பல நேரங்களில், அதற்கு முன்பே உறவில் உருவாகும் உணர்வுப்பூர்வமான இடைவெளி, தனிமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத நிலை உள்ளிட்ட பல காரணிகள் பின்னணியில் இருக்கலாம். குறிப்பாக, குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போவது குறித்தும் இந்த விவாதம் கவனம் […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பிரிவில் 41 இடங்களும், குரூப்-2A பிரிவில் 780 இடங்களும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். முதல்நிலைத் […]
சந்திரன் இன்று சூரியனை முழுமையாக மறைத்து, பகல் நேரத்தை இரவு போல மாற்றவுள்ளது. இயற்கையின் மிக அரிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த ‘முழு சூரிய கிரகணம்’, வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமையவுள்ளது. புதன்கிழமை இன்று, வடக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. ஒரு குறுகிய பாதையில் பகல் நேர வானம் இருளாக மாறும் இந்த அபூர்வ நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் […]
ஒரே அறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஒருவர் கூட மற்றவர்களுடன் பேசுவதில்லை. ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களை அருகில் இருப்பவர்களாகக்கூட கவனிக்காத இந்தக் காட்சி, தற்போது பல குடும்பங்களில் சாதாரணமாக மாறி வருகிறது. குறுகிய நேரத்தில் பொழுதுபோக்கை வழங்கும் ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்கள், நேரத்தை கடத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். ஆனால், ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்த […]
ஒரு உறவில் அன்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தம்பதியிடையேயான நெருக்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவன் – மனைவிக்கு இடையேயான நல்ல நெருக்கம் அவர்களின் உறவை வலுப்படுத்துவதோடு, மனநிலை மற்றும் உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரத்தில், உறவில் நெருக்கம் குறைந்தால் கோபம், எரிச்சல், மன அழுத்தம் மற்றும் சோகம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஹைதராபாத் யசோதா […]

