இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான தனித்துவமான விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான இலக்கு இஸ்ரோவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மனிதரில்லா சோதனை விண்கலம் நடப்பாண்டிற்குள் ஏவப்படவுள்ளதாகவும் […]

சாணக்கியர் சிறந்த சிந்தனையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் ஆலோசகராக அறியப்படுகிறார். அவர் எழுதியதாகக் கூறப்படும் ‘சாணக்கிய நீதி’ நூலில், ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. சமூகத்தில் சிலருக்கு அதிக மரியாதையும் மதிப்பும் கிடைக்கிறது. அவர்களுக்கு தேவையான நேரங்களில் உதவுவதற்கும் பலர் முன்வருகிறார்கள். அதே நேரத்தில், சிலருக்கு சமூகத்தில் உரிய மதிப்போ மரியாதையோ கிடைப்பதில்லை. அவர்களுக்கு உதவவும் பலர் தயங்குகிறார்கள். ஒருவரின் […]

ஒருவருக்கு பக்கவாட்டில் படுத்து தூங்குவது வசதியாக இருக்கலாம். மற்றொருவருக்கு முதுகில் படுத்து தூங்குவது சௌகரியமாக இருக்கலாம். உண்மையில், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே சிறந்த தூங்கும் நிலை என்று எதுவும் இல்லை. ஒருவரின் வயது, உடல் நிலை, உடல் அமைப்பு மற்றும் தனிப்பட்ட சௌகரியம் ஆகியவற்றைப் பொறுத்து தூங்கும் நிலையைத் தேர்வு செய்வது முக்கியம். பக்கவாட்டில் படுத்து தூங்குவது நல்லதா? பலருக்கு பக்கவாட்டில் படுத்து தூங்குவது சௌகரியமாக இருக்கும். இந்த நிலையில் […]

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தற்போதைய காலம் வரையிலான பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு மேற்கொண்ட செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளன. அதன்படி, 2021ஆம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் ரூ.36.11 கோடி செலவிடப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டான 2022இல் இந்த செலவு அதிகரித்து சுமார் ரூ.55.82 கோடியாக […]

சூரியன் அழியும் காலத்தில் பூமியையும் மனித குலத்தையும் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் ஒரு புதிய பதிலை முன்வைத்துள்ளது. இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தனது இறுதி நிலையை அடைந்து விரிவடையும் போது, அது புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களை விழுங்கி பூமியையும் அழித்துவிடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த பேரழிவில் இருந்து தப்பிக்க கேப்ரியல் ஹாரி என்ற சுயேச்சை ஆராய்ச்சியாளர் ‘ஜர்னல் ஆஃப் தி […]

ஆயுர்வேத மருத்துவத்தில் தேன் வெறும் சுவையான உணவுப்பொருளாக மட்டுமின்றி, பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த இயற்கை மருந்தாகவும் போற்றப்படுகிறது. இயற்கைச் சர்க்கரைகளுடன் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள தேனைச் சரியாக உட்கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை சீராக்கி, சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். இருப்பினும், தேனை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைகளுக்குப் பதிலாகத் தீங்கையே விளைவிக்கும் என […]

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு தடை விதித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோவில் தரிசனத்திற்கு வரும்போது, அவர்கள் வருகை தரும் நேரம் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பாக ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க […]

வரலாற்றிலேயே முதன் முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கியை(Telescope) பயன்படுத்தி சூரியனின் மேற்பரப்பை இதுவரை காணாத புதிய மற்றும் மிகத் துல்லியமான விவரங்களுடன் படம் மற்றும் வீடியோ மூலம் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய பதிவுகளில், இந்த புதிய பதிவுகளில், முன்பு நேரடியாகக் காணப்படாத சிறிய சுழல் வடிவ இயக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆய்வாளர்களின் விளக்கப்படி, சூரியனின் உள் பகுதியில் உள்ள அதிக வெப்பமுள்ள வாயுக்கள் தொடர்ந்து நகர்வதால், […]

நாட்டில் உள்ள ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு சமையலுக்கு தேவையான எல்பிஜி (LPG) இணைப்பு வழங்கப்படுகிறது. முன்பு பல குடும்பங்கள் விறகு, நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தி சமையல் செய்து […]

மழைக்காலத்தில் கார் ஓட்டும் போது பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, ஏசி இயக்கிய சில நிமிடங்களில் கண்ணாடிகளில் பனி படர்வது. இதனால் சாலையை தெளிவாக பார்க்க முடியாமல், விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. ஆனால், காரில் இருக்கும் ஒரு சிறிய வசதியை சரியாக பயன்படுத்தினால், இந்த பிரச்சனையை சில நொடிகளில் சரி செய்ய முடியும். கார் கண்ணாடியில் பனி படர்வதற்கு முக்கிய காரணம், காருக்குள் இருக்கும் குளிர்ந்த காற்றுக்கும், […]