79 வயதான அதிபர் டிரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு chronic venus insuffiency எனப்படும் நோய் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த சில நாட்களாக அவரின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு செயலிழப்பு) என்ற நிலை இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து […]

பஹல்காம் தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)-ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த முடிவு இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கின்றன என்பதை நிரூபித்துள்ளது என்றும் கூறினார். எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க பதிவில் “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து […]

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரின் மத்தியில் , இரு நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 1,000 வீரர்களின் உடல்களை உக்ரைன் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைன் 19 ரஷ்ய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. இந்த பரிமாற்றம் குறித்து ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி உறுதிப்படுத்தினார். எங்கள் […]

சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும் என்ற வரலாற்று உண்மையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உலகின் மிகப் பழமையான நாடுகள் என்று அறியப்படும் நாடுகள் எது என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் “உலகின் மிகப் பழமையான நாடுகள்” குறித்து பேசும்போது, அது வெறும் இன்றைய காலத்தின் தேசிய நாடுகள் பற்றி மட்டும் அல்ல, மாறாக அது, பண்டைய நாகரிகங்கள் மற்றும் பாரம்பரியங்கள், அவை தொடர்ச்சியாகக் […]

சிறைச்சாலை என்றாலே இருட்டான அறை, மோசமான உணவு அசுத்தமான இடங்கள் தான் நம் நினைவுக்கும் வரும்.. சிறையில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களும் சித்ரவதைகளும் நடைபெறும் இடமாகவே நாம் கருதுகிறோம்.. அதனால் சிறை என்றாலே நம்மில் பலரும் பயப்படுகிறோம்.. ஆனால் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் ஆடம்பர சிறைகளும் இருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. உண்மைதான், பல நாடுகளின் சிறைகள் மிகவும் ஆடம்பரமாக இருக்கின்றன.. இங்கு கைதிகளுக்கு பல […]

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சரி செய்து விடலாம். ஆனால் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் அது உயிருக்கே கூட உலை வைக்கும் அளவிற்கு கொடிய நோயாகும். நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் கேன்சரை உண்டாக்கும் அல்லது கேன்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த பொருட்களில் உள்ள […]

இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைத்து பிரதமர் ஜெய்ர் ஸ்டார்மர் அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.கடந்த ஆண்டு இந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. இதன்மூலம் ஜனநாயகத்தில் […]