கென்யாவில் சுற்றுலா பயணி ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளிடையே இந்த வீடியோ பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.. இதுகுறித்து கென்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. வனவிலங்கு சரணாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் அந்த நபர், பிரபலமான உள்ளூர் பிராண்டான டஸ்கர் பீரை குடித்துவிட்டு, மீதமுள்ள பீரை யானைக்கு வழங்குவதைக் பார்க்க முடிகிறது… இப்போது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு “ஒரு தந்த நண்பருடன் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.. கடந்த 24 மணி நேரம் பொதுவில் தோன்றவில்லை என்பதாலும், ஆகஸ்ட் 30–31 வரை எந்த நிகழ்வுகளும் திட்டமிடப்படாததாலும் அவர் இறந்துவிட்டதாக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர்.. ட்ரம்பின் சமீபத்திய உடல்நலக் கவலைகள் மற்றும் அவரது கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டதாக வந்த தகவல்கள் காரணமாக இந்த ஊகங்கள் மேலும் தீவிரமடைந்தன. இருப்பினும், ட்ரம்ப் சோஷியலில் […]

இன்றைய கோடீஸ்வர பெண்கள் என்றாலே, ​​நீதா அம்பானி, ராதிகாராஜே கெய்க்வாட் மற்றும் சாவித்ரி ஜிண்டால் போன்ற பெயர்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தால், இன்றைய கோடீஸ்வரர்கள் கூட கனவு காண முடியாத அளவுக்கு செல்வமும் வாழ்க்கை முறையும் கொண்ட ராணிகள் இருந்தனர். இந்தப் பெண்கள் பரந்த பேரரசுகளை ஆண்டனர், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை வைத்திருந்தனர். தங்க அரண்மனைகள் மற்றும் அரிய நகைகள் முதல் மகத்தான அரசியல் […]

வரி போர்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதிப்படுத்தியது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து […]

பாகிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், வாகா-அட்டாரி எல்லையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடையே எதிர்வினையை தூண்டியுள்ளது. சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், வாகா எல்லையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடக்கும் தினசரி தேசிய கொடி இறக்கும் விழாவின் போது, பாகிஸ்தான் பக்கம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் இந்தியா பக்கம் நன்கு சுத்தமாகவும், அமைதியாகவும் காணப்பட்டது. இதைக் கண்ட நெட்டிசன்கள் […]

பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட நாட்டின் முக்கிய பெண்களின் போலியான படங்களை ஒரு ஆபாச வலைத்தளம் வெளியிட்டதை அடுத்து இத்தாலியில் பெரும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. மெலோனியின் சகோதரி அரியன்னாவும் இலக்கு வைக்கப்பட்ட பெண்களில் ஒருவர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எல்லி ஷ்லீன், செல்வாக்கு மிக்க சியாரா ஃப்ரெராக்னி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரா மோரெட்டி ஆகியோரின் படங்களும் இந்தப் புகைப்படங்கள் ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான தலைப்புகளுடன் […]

இங்கிலாந்து முழுவதும் குறைந்தது 85 இடங்களில் “கும்பல் அடிப்படையிலான குழந்தைகள் பாலியல் சுரண்டல்” சம்பவம் அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த கும்பல் பாகிஸ்தானை சேர்ந்தது என்றும் அந்நாட்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ், தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் “grooming gangs” என்ற விசாரணையின் ஒருபகுதியாக, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த “பாலியல் கும்பல்கள்”, […]

போலந்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சி ஒத்திகையின்போது போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவ விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலந்தின் ராடோமில் விமானக் கண்காட்சி இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஒத்திகையி போது அந்நாட்டு விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ விமானி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானியின் அடையாளம் உடனடியாகத் தெரியவில்லை. இதனை போலந்து […]

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று ரஷ்யா தாக்குதல் நடத்தியது.. இதில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். இது கீவ் நகரில் நடந்த மிகக் கொடிய ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலையில் கீவ் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள், நகரம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்ததாக தகவல்கள் […]