அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவை எக்ஸ் தளத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் முன்னணி தொழிலதிபரும் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே உருவாகியிருந்த அரசியல் மற்றும் தொழில்துறை நெருக்கம் தற்போது பெரும் விரிசலை சந்தித்துள்ளது. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக மறைந்த பாலியல் குற்றவாளியான […]

இங்கிலாந்தில் ஒரு பெண், டூத் பிரஷ் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார். பொதுவாக, கணவன் துரோகம் செய்கிறார் என்று மனைவிகள் சந்தேகம் கொள்வது, அவர் செல்போனில் வரும் சந்தேகமான மெசேஜ்கள் அல்லது நடத்தை மாற்றங்கள் காரணமாக தான். ஆனால் இங்கிலாந்தில் ஒரு பெண், மிகவும் விசித்திரமான முறையில், மின்சார பல் துலக்கும் சாதனத்தின் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார். […]

மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அவசியம். பூமியில் தண்ணீர் ஒரு தவிர்க்க முடியாத ஒன்று, அது இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது. உலகெங்கிலும் உள்ள மக்கள் மண்ணிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பதன் மூலம் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கிறார்கள். மக்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள், ஆனால் பூமியிலிருந்து நாம் அதிக அளவு தண்ணீரைப் பிரித்தெடுத்துள்ளதால் […]

அமெரிக்காவில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, இந்திய பெண் ஒருவர் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி உணவாக அளித்த நிலையில், அதை பார்த்த அந்த தொழிலாளர்கள், “இப்படி ஒரு உணவா! என மெய்சிலிர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், ஒரு இந்திய பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தென்னிந்தியாவில் மிக பிரபலமான மெதுவடையை அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சமைத்து, அருகில் […]

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட HKU5-CoV-2 எனப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு மற்றொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.. சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் […]

உலகின் டாப் 10 ஆரோக்கியமான நாடுகள் என்னென்ன? இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மிக முக்கியமான காரணியாகும். ஆரோக்கியமான நாடுகள் எப்போதுமே ஆயுட்காலம், சுகாதாரப் பராமரிப்பு தரம், உணவுமுறை மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னணியில் உள்ளன, இவை அனைத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாகும். மேலும், மன மற்றும் […]

நன்றியில்லாதவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பை சாடிய எலோன் மஸ்க், “எனது உதவி இல்லையென்றால் 2024 தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், தற்போது கடுமையான பொதுவெளி சண்டையாக மாறியுள்ளது. இதன் மையக் காரணமாக, டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ள “One Big Beautiful Bill” என்ற வரி […]

சோசியல் மீடியாவில் பிரைவசி பற்றிய கவலைகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் மெட்டா (Meta) மற்றும் யாண்டெக்ஸ் நிறுவனங்கள், பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை அனுமதியின்றி சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக, ஆண்டிராய்டில் பாதுகாப்பு அமைப்பு காரணமாக, ஒரே மொபைலில் உள்ள மற்ற செயலிகளில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் அந்த […]

ஹார்வர்ட் பல்கலைக்கழக படிப்புகளில் சேர அமெரிக்காவிற்கு வரும் புதிய வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உயர்கல்வி, குறிப்பாக ஹார்வர்டு மீதான அதன் அடக்குமுறையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. குடியரசுக் கட்சி முன்னதாக பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்திருந்தது, அந்த உத்தரவு நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க […]

“Paris Kids Fashion Week” என்ற பெயரில் ஒரு சீன நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் ஃபேஷன் ஷோ நடத்தி வருகிறது. பல பாரிஸ் ஃபேஷன் வீக்குடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பெற்றோர்களை ஏமாற்றி பணம் வசூலித்தது. உண்மையில் பாரிஸ் ஃபேஷன் வீக்குடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத இந்த நிறுவனம், உலகின் முக்கியமான ஃபேஷன் மேடைகள், பிரபல பிராண்டுகள் மற்றும் புகழ்பெற்ற கலைக் கூடங்களின் பெயர்களை தவறாக […]