fbpx

சிங்கப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என உள்துறை அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியதாக பெண் உள்பட 3 பேரை சிங்கப்பூர் பாதுகாப்பு படையினர் கைது செய்திருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சண்முகம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போதும், …

Trump warns: காசாவில் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் வரும் சனிக்கிழமை பிற்பகலுக்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்காவிட்டால் நரகம் உருவாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளனர். இந்த தாக்குதகளால் 47000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். …

பாரிஸில் நடந்த AI செயல் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவின் உள்ளார்ந்த சார்புகள் குறித்து எச்சரித்தார். மேலும் AI தொடர்பான பிரச்சினைகளைக் கையாள உலகளாவிய தரநிலைகள் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் பேசுகையில், “AI முன்னெப்போதும் இல்லாத அளவு ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. நமது பகிரப்பட்ட மதிப்புகளை …

Most peaceful countries: உலகின் பல நாடுகள் வன்முறை மற்றும் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றன, ஆனால் சில நாடுகளில் வன்முறை மிகக் குறைவாகவும் குடிமக்கள் அமைதியாகவும் வாழ்கின்றனர். அதன்படி, பாதுகாப்பும் அமைதியும் மிக முக்கியமான உலகின் 10 அமைதியான நாடுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

உலகின் மிகவும் அமைதியான முதல் 10 நாடுகளின் பட்டியலின் முதலிடத்தில் ஐஸ்லாந்து …

Hajj: ஹஜ் யாத்திரையின்போது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் கூட்டம் காரணமாக தற்போது, குழந்தைகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் சவுதி அரேபியாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமியர்கள் குறிக்கோளாக கொண்டு இருக்கின்றனர். அந்தவகையில், …

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் பேருந்து ஒன்று பாதுகாப்பு சுவற்றின் மீது மோதி பாலத்தில் இருந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த சாலை விபத்து மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாகும் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் …

Earthquake: வடக்கு மொராக்கோவில் உள்ள க்சார் எல் கெபிர் அருகே 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

வடக்கு மொராக்கோவின் தலைநகர் ரபாத் உட்பட, மையப்பகுதியிலிருந்து தெற்கே 200 கிமீ (125 மைல்) வரை உணரப்பட்டது. க்சார் எல் கெபிர் அருகே 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் …

Indians arrested: வங்கதேசத்துடனான பதற்றத்திற்கு மத்தியில் இமயமலை நாடான பாக்மதி மாகாணத்தில் ‘ஆன்லைன் சூதாட்ட மோசடி’ நடத்தியதற்காக 23 இந்தியர்களை நேபாள போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்தியா தனது அண்டை நாடான வங்கதேசத்துடன் பதட்டமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. முகமது யூனுஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இருப்பினும், …

New ocean form: ஆப்பிரிக்க கண்டம் ஒரு விசித்திரமான புவியியல் மாற்றத்தை சந்தித்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க பிளவு கண்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்தப் பிரிவு செயல்முறை ஒரு புதிய கடலை உருவாக்குகிறது, இது ஆப்பிரிக்காவின் புவியியலை மாற்றுவது மட்டுமல்லாமல், அதன் சுற்றுச்சூழல் அமைப்பையும் பல நாடுகளின் பொருளாதாரங்களையும் பாதிக்கும். கிழக்கு ஆப்பிரிக்க பிளவு …

Boat capsizes: லிபியா கடற்கரையில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 65 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின்படி (MoFA), ‘லிபிய நகரமான ஜாவியாவின் வடமேற்கே உள்ள மார்சா டெலா துறைமுகத்திற்கு அருகே சுமார் 65 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென …