ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகள் மீது 40% வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள டிரம்ப், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மியான்மர் மற்றும் லாவோஸ் மீது அதிகபட்சமாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் பற்றிய தகவல்களை டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் […]

அமெரிக்காவின் டெக்சாஸைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதால், சேறு நிறைந்த ஆற்றங்கரைகளில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக […]

ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் காபூல், அதிகரித்து வரும் நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலாப நோக்கற்ற நிறுவனமான மெர்சி கார்ப்ஸின் புதிய அறிக்கையின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் தண்ணீர் இல்லாத முதல் நவீன நகரமாக ஆப்கானிஸ்தான் தலைநகரம் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. காபூலில் தண்ணீர் பற்றாக்குறைக்கு என்ன காரணம்? அதிகப்படியான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக நகரின் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து […]

ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளதாவது, வரிவிதிப்பு தொடர்பாக இந்த இரு நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும், ஜப்பானும் தென்கொரியாவும் எதிர்வினையாக இறக்குமதி வரிகளை (import taxes) அதிகரிக்க முயன்றால், […]

பூமி இப்போது இயல்பை விட வேகமாகச் சுழன்று வருகிறது என்றும் இதனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 3 நாட்களில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும் விஞ்ஞானிகள் பதிவிட்டுள்ளனர்.. பூமி என்ற கோள் தனித்துவமானது. பூமியின் தன்னை சுழன்று சூரியனை சுற்றி வருவதால், இரவு பகல் மாறி வருகிறது.. பூமி தன்னை தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரம்.. அதாவது ஒரு நாள்.. அதே […]

பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற ரஷ்ய அரசின் அறிவிப்பு உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைய தலைமுறையிடம் உள்ளது. அவர்களிடம் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, திறன் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பையும், சிந்தனையையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் ரஷ்ய நாட்டின் புதிய அறிவிப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் அவர்களுக்கு […]

அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளை கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இதற்கு விதிவிலக்குகள் எதுவும் இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார். பிரிக்ஸ் மாநாட்டில், பிரேசில், […]

வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் கடற்படை தளபதி ரம்ஸி ரமலான் அப்துல் அலி சலே கொல்லப்பட்டார். இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. சமரச முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல், மறுபக்கம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய […]

வானிலை மையம் (NOAA) மற்றும் தேசிய வானிலை சேவை துறையில், பணியாளர் குறைபாடு காரணமாக டெக்சாஸ் வெள்ளத்திற்கான எச்சரிக்கை சரியாக அளிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன அமெரிக்காவின் டெக்சாஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இடி-மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. குறிப்பாக குவாடாலூப் ஆறு கரை புரண்டதில், வெள்ளம் நகரின் உள்ளே புகுந்தது. […]

டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடவுள்ளார். அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு […]