டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால் விமானம் பாதியிலேயே தரையிறங்கியது. ஜூலை 2 ஆம் தேதி, டெல்லியில் இருந்து வாஷிங்டன், டிசிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திட்டமிடப்பட்ட எரிபொருள் நிறுத்தத்தின் போது பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால், ஆஸ்திரியாவின் வியன்னாவில் பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அட்டவணைப்படி இயங்கி வந்த AI103 விமானம், வியன்னாவில் திட்டமிட்ட எரிபொருள் நிரப்பும் நிறுத்தத்தை மேற்கொண்டது. […]

மாலியில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதற்கு இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதனை ஒரு ‘வன்முறைச் செயல்’ என்று கூறியது. மேலும், இந்தியர்களை மீட்பதையும், பாதுகாப்பாக நாடு திரும்புவதையும் மாலி உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி, ஆயுதமேந்திய தாக்குதல் குழுவினர் தொழிற்சாலை வளாகத்தில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியபோது, ​​கேயஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்த […]

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான பாலிக்குச் சென்று கொண்டிருந்தபோது கப்பல் கவிழ்ந்து நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 38 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். KMP துனு பிரதாமா ஜெயா என்ற அந்தக் கப்பல், கிழக்கு ஜாவாவின் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகு, பாலி ஜலசந்தியில் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் […]

கானா அரசு நாட்டின் உயரிய விருதான’தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக நேற்று கானா சென்றடைந்தார். விமான நிலையத்தில் கானா அதிபர் மேதகு ஜான் டிராமணி மஹாமா, பிரதமருக்கு சிறப்பு மரியாதையுடன், பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தார். இந்த மரியாதை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் […]

நவீன உலகத்தின் வசதிகளில் பிளாஸ்டிக் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக, மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உலகம் முழுவதும் பரவி, சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். அவை பெரிய பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடைவதால் உருவாகின்றன. மேலும், அழகுசாதனப் பொருட்கள், துணிகள் […]

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை திரும்ப அழைத்துள்ளது . இதுபோன்ற சூழ்நிலையில் , நாட்டில் ஐபோன் -17 உற்பத்தி இப்போது சவால்களை எதிர்கொள்ளக்கூடும். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி , வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் மோதல் […]

நேற்று முன் தினம் மாலை ​​ஜப்பான் ஏர்லைன்ஸ் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்தில் நடுவானில் கீழே விழப்போனதால், அதிலிருந்த பயணிகள் பீதியடைந்தனர். இதனால் பயந்துபோன பயணிகள் ஆக்ஸிஜன் முகமூடிகளை அணிந்துகொண்டனர்.. இதுவே தங்களின் இறுதி தருணங்களாக இருக்கலாம் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்திற்குப் பயணித்த JL8696 விமானம், புறப்பட்ட […]

உலக பணக்காரரான எலான் மஸ்க் உள்ளிட்டோரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க செனட்டில் டிரம்பின் வரி மசோதா நிறைவேறியது. செனட் குடியரசுக்கட்சியினர், அதிபர் டொனால்ட் டிரம்பின் பெரிய வரிவிலக்குகள் மற்றும் செலவுக் குறைப்புத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றினர். நேற்று இரவு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு கூட்டத்திற்கு பிறகு, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும், தங்களுடைய சொந்த குடியரசுக்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, அவர்கள் இந்த […]

ராணுவ தளபதியை விமர்சித்தது தொடர்பான ஆடியோ லீக்கான நிலையில், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசமைப்பு சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன்சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவத் தளபதியை ஷினவத்ரா விமர்சித்துள்ளார். இதுதொடர்பான உரையாடல்கள் கசிந்து நாட்டில் சர்ச்சையை […]