நடிகர் அஜித் பற்றி யாரும் அதிகம் அறிந்திராத தகவல் ஒன்றை பிரபல இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித், தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்… அஜித் படம் என்றாலே அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.. இந்த சூழலில் அஜித் குறித்து பலருக்கு தெரியாத தகவலை இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஒரு படத்திற்கு ஒப்பந்தமானாராம். இதுகுறித்து தான் அந்த இயக்குனர் தற்போது பேசியுள்ளார்.
நடிப்பு என்பதை தாண்டி அஜித் ஒரு பைக் ரேசர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படி அவர் பைக் ரேசில் ஈடுபடும் போது, ஏற்பட்ட விபத்துகள் காரணமாக அஜித்திற்கு பல்வேறு அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளன. அப்படி ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது தான், இயக்குனர் ராஜீவ் மேனன் அஜித்திடம் ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ படத்தின் கதையை கூறினாராம். கதை பிடித்து போகவே அதற்கு மருத்துவமனை படுக்கையிலேயே ஒகே சொல்லிவிட்டாராம்.
ராஜீவ் மேனன் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். முதலில் இந்த படத்தில் இடம்பெற்ற மனோகர் கேரக்டருக்கு நடிகர் பிரசாந்தை தான் அணுகினாராம். ஆனால் பிரசாந்தோ தனக்கு ஜோடியாக தபுவிற்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும் என்று கூறி அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அதன்பிறகே நடிகர் அஜித்தை அந்த கேரக்டருக்கு தேர்வு செய்ததாக ராஜீவ் மேனன் தெரிவித்தார். கடந்த 2000-ம் ஆண்டு அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.