சினிமா ஆசையுடன் திரையுலகிற்கு வரும் நடிகைகளுக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பல அட்ஜஸ்ட்மென்ட் சம்பவங்களுக்கு பிறகு ஒரு சிலருக்கு முன்னணி நடிகையாகும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அதிலும் பெற்ற மகளையே பணத்திற்காக படுக்கைக்கு அனுப்பும் தாய்க்குலங்களும் இருக்கிறார்கள். இது பிடிக்கவில்லை என்றாலும் அம்மாவின் வற்புறுத்தலால் பலரின் ஆசைக்கு இணங்கும் நடிகைகளும் உண்டு. இதுகுறித்து பல திரைப்படங்களில் நாம் பார்த்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு நடிகை இது போன்ற கஷ்டத்தை அனுபவித்து இறுதியில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களிலும் ஐட்டம் டான்ஸ் ஆடியவர் தான் அந்த நடிகை. அக்கட தேசத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க தன் பிள்ளைகளுடன் சென்னை பக்கம் வந்த நடிகையின் அம்மா ஆரம்பத்தில் பிச்சை எடுக்கும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளார். அம்மா படும் இந்த கஷ்டத்தை பார்த்து தான் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்து சினிமாவில் நடிக்கும் முடிவிற்கு சம்மதித்திருக்கிறார். ஆனால், அதுவே தொடர்கதையாகி போனதால் விரக்தியின் உச்சத்திற்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த கஷ்டத்தை அனுபவிக்க முடியாமல் அவர் சினிமாவை விட்டும் விலகினார். அதன் பிறகு வளர்ந்து வரும் ஒரு நடிகருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இனியாவது சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்த அந்த நடிகை தன் காதலருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.
ஆனால், அதுவும் சில வருடங்கள் கூட நீடிக்கவில்லை. பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் நடிகையின் காதலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போதிலிருந்து மன அழுத்தத்தில் இருந்த நடிகை ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், விதி வாசத்தால் காப்பாற்றப்பட்ட அந்த நடிகை சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டு மரணித்தார். இப்படி அம்மாவுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து இறுதியில் தன் வாழ்க்கையையே முடித்துக் கொண்டார் அந்த நடிகை.