விஜய் டிவியில் சீரியல்களை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமடைந்தார் நடிகர் கவின். 2017ஆம் ஆண்டு வெளியான சத்ரியன், நட்புனா என்னான்னு தெரியுமா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த கவின், லிப்ட் திரைப்படம் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் கவின் வெள்ளித்திரையிலும் கவனம் பெறத் தொடங்கினார்.
லிப்ட் படத்தைத் தொடர்ந்து ஆகாஷ் வாணி இணையத் தொடரிலும் நடித்தார். இதற்கிடையே, கவின் அறிமுக இயக்குனர் கணேஷ் பாபுவுடன் இயக்கிய ‘டாடா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுடன் இணைந்து பிரபல நடிகர் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஹரிஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கவினின் நடிப்பு பாராட்டை பெற்றது. தற்போது கவின் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கவின் புது மாப்பிள்ளையாக போகிறார் என்றும் அவருக்கு வீட்டில் பெண் பாத்தாச்சு இந்த மாதம் 20ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் நேற்று முழுவதும் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து இருந்தது. ஆனால், கவினை திருமணம் செய்து கொள்ளும் பெண் யார் என்று தகவல் வெளியாகாத நிலையில், பெண்ணின் பெயர் மோனிகா என்றும் இவர் தனியார் பள்ளி ஒன்றில் டீச்சராக பணியாற்றி வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.