தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா கோலிவுட்டில் நடிகையாக தனது கரியரை தொடங்கினார். இங்கு அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தொடர்ந்து தெலுங்கிலும் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது, அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது.
இவர்களின் காதலுக்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் முழு சம்மதம் தெரிவித்த நிலையில், இருவரும் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது முன்னாள் கணவர் மூன்று வருடங்களுக்கு பிறகு ஷோபிதவை திருமணம் செய்து கொண்டதிற்கு பலர் விமர்சனங்களை தெரிவித்தனர்.
ஆனால் சமந்தா, ஒரு பக்கம் மையோசைட்டிஸ் நோய்க்கு சிகிச்சை, இன்னொரு பக்கம் சினிமா என தன்னுடைய பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனிபன்னி வெப் சிரீஸ் வெளியானது. அது ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அடுத்ததாக புதிய வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார்.
இதற்கிடையே அவர் தற்போது மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் பரவிவருகின்றன. இந்தச் சூழலில் அவர் போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீ என் கைகளை இறுகப் பற்றிக் கொள்வாயா?.. அவர்கள் ஏதேனும் பொய் சொன்னால் என்னை திருப்பி அனுப்பிவிடாதே” என்று தனது புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், சமந்தா மீண்டும் காதலில் விழுந்துவிட்டார் என்று உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த நபர் இயக்குனர் ராஜ் நிதி மோரு என்று பலர் கூறி வருகின்றனர். சமந்தா அவரை தான் மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது. தி ஃபேமிலி மேன் படத்தை இயக்கிய இயக்குனர் தான் இந்த ராஜ் நிதி மோரு.
சமந்தாவிற்கு இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கிளாமராக நடித்தது தான் அந்த விவாகரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more: பாலியல் புகார் அளித்த பெற்றோர்; தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியர்..