fbpx

’பொன்னியின் செல்வன்’ படத்தின் டிக்கெட் ரூ.100-க்கு விற்பனையா? இயக்குனர் சொன்ன முக்கிய காரணம்..!

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிக்கெட்டை 100 ரூபாய் விற்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

’பொன்னியின் செல்வன்’ படத்தின் டிக்கெட் ரூ.100-க்கு விற்பனையா? இயக்குனர் சொன்ன முக்கிய காரணம்..!

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை  கிட்டதட்ட ரூ.5 கோடிக்கான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

’பொன்னியின் செல்வன்’ படத்தின் டிக்கெட் ரூ.100-க்கு விற்பனையா? இயக்குனர் சொன்ன முக்கிய காரணம்..!

இந்நிலையில், படத்துக்கு முதல் நாள் முதலே அரசு நிர்ணயித்த விலையில்தான் டிக்கெட்களை விற்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்களிடம் மணிரத்னம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் விலையை 100 ரூபாயாக விற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஏனென்றால், அப்போதுதான் மக்கள் குடும்பத்தோடு வந்து படத்தை பார்ப்பார்கள், என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

Chella

Next Post

கட்டிலில் தூங்கிய குழந்தை தவறி கிழே விழுந்ததால் பரிதாப பலி: தவிக்கும் தாய்..!

Tue Sep 27 , 2022
அரியலூர் மாவட்டம், இளங்குடந்தை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகா (24). இவர் காங்கயத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூல் மில்லில் பணிபுரிந்து வந்தார். அதே மில்லில் பணிபுரிந்தவர் விக்னேஷ். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கனீஸ் (6) என்ற மகனும், மகாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினரிடையே […]

You May Like