தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன், அவர் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் தான் “விடுதலை”. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தனுஷூம் ஒரு பாடலை பாடியுள்ளதால் எப்போது இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ரோப் கயிறு திடீரென்று அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் சண்டை பயிற்சியாளரான சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.