fbpx

தேசிய செய்திகள்

  • பல கோடி போச்சு..! இரவோடு இரவாக காலி செய்த துபாய் நிறுவனம்.. இந்திய முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!

    துபாயில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ‘Gulf First Commercial Brokers’ என்ற பெயரில் செயல்பட்ட பங்குத் தள நிறுவனம், திடீரென தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு நள்ளிரவில் மாயமாகிவிட்டது.

    துபாயில் செயல்பட்டு வந்த ஒரு ப்ரோக்கரேஜ் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், இந்தியர்கள் உள்பட பல முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளனர்.
    ‘Gulf First Commercial Brokers’ எனும் இந்த நிறுவனம், கடந்த மாதம் வரை பிஸினஸ் பே என்னும் வணிக மையத்தில் செயல்பட்டது. தற்போது அந்த அலுவலகங்கள் காலியாக காணப்படுகின்றன.

    இந்த நிறுவனம் சுமார் 40 பேர் கொண்ட ஊழியர்களுடன் இயங்கி வந்தது. தற்போது அந்த அலுவலகங்கள் முழுமையாக காலியாக காணப்படுகின்றன. அங்கே சென்று பார்ப்பவர்களுக்கு வெறும் ஒரு துடைப்பம், ஒரு நீர்தொட்டியும் மட்டுமே உள்ளே காணப்படுகிறது.

    அந்த வணிக வளாகத்தின் பாதுகாப்பு ஊழியர் கூறுகையில்: “அவர்கள் அலுவலக சாவிகளை ஒப்படைத்து, உள்ளே இருந்த அனைத்தையும் அகற்றிவிட்டு, உடனே சென்று விட்டார்கள். இப்போது அந்த நிறுவனம் பற்றிக் கேட்க தினமும் பலர் வந்து என்னை அணுகுகிறார்கள்” என்றார். இந்த மோசடியில் சிக்கியவர்களில், கேரளாவைச் சேர்ந்த முகமது மற்றும் ஃபயாஸ் என்ற இரு இந்தியர்கள் முக்கியமாக குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் இணைந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.62 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து ஃபயாஸ் கூறும்போது, “முதலில் $1,000 மட்டும் முதலீடு செய்யச் சொன்னார் என் ரிலேஷன் மேனேஜர். பிறகு சிறிய லாபங்களை காட்டி நம்பிக்கை ஏற்படுத்தினார். அதனால் தொடர்ந்து அதிக பணத்தை செலுத்தச் சொன்னார். நாங்கள் அவர்களை நம்பி பணம் செலுத்தினோம். எங்களிடம் இருந்த அனைத்து தொடர்பு எண்களும் இப்போது செயலிழந்துவிட்டன,” என்றார்.

    இந்த மோசடியில் சிக்கிய மற்றொரு முக்கியமான நபர், கன்னடம் தாய்மொழியாக கொண்ட ஒருவர். அவர் கூறுவதாவது: “எனக்கு வழங்கப்பட்ட ரிலேஷன் மேனேஜர் என்னுடன் என் தாய்மொழியான கன்னடத்தில் பழகினார். முதலில் சிறிய லாபங்களை தருவதாகக் காட்டினார். சில பணத்தை எடுத்தும் விட்டேன். அதன் மூலம் நம்பிக்கை வந்தது. அதன் பின்னர் அதிக தொகையை முதலீடு செய்யத் தூண்டினார். இப்போது ஏமாற்றி விட்டார்கள் என கண்ணீர் வடித்தார்.

    அவர் இழந்த தொகை சுமார் $2.3 லட்சம், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.9 கோடி ஆகும். இந்த நிறுவனத்தால் மோசடியின் பல்வேறு வழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் முக்கியமான ஒன்று Sigma-One Capital என்ற அங்கீகாரமற்ற ஆன்லைன் ட்ரேடிங் தளத்தின் மூலமாக முதலீடுகளை திரட்டியது. பல முதலீட்டாளர்கள், “Gulf First மற்றும் Sigma-One என்ற பெயர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டன. இரண்டும் ஒரே நிறுவனமாகவே எங்களிடம் தெரிவித்தனர்,” என புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த தளத்தின் மூலமாக, முதலீடு செய்தவர்களுக்கு பாதுகாப்பான லாபம் உத்தரவாதம் என கூறப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய அளவிலான லாபம் வழங்கப்பட்டது. அதன்பின் நம்பிக்கையை ஏற்படுத்தி மேலும் பணம் செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இப்போது, ஒட்டுமொத்தமாக இந்த இணையதளம் செயலிழந்துள்ளது. நிறுவன அலுவலகங்கள் காலியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பல லட்சம் தொகைகளை இழந்துள்ளனர்.

    துபாய் போலீசார், Gulf First மற்றும் Sigma-One Capital ஆகிய நிறுவனங்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், Sigma-One Capital நிறுவனத்திற்கு துபாய் நிதி சேவைகள் ஆணையம் (DFSA) அல்லது பங்குச் சந்தை மற்றும் சரக்கு ஆணையத்திடம் (SCA) எந்தவொரு அங்கீகாரமும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    Read more: “கொலை.. கொள்ளை.. போதை.. பாலியல் வன்கொடுமை..” திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா..?

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]