45 நாட்கள் இந்த பழம் சாப்பிடுங்க; உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும்!

Fruits

பொதுவாக, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் முதலில் நினைவிற்கு வருவது பழங்கள் தான். பழங்கள் உடல்நலத்தை பாதுகாக்கவும், தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சில நேரங்களில் பழங்களின் விலை காரணமாக அவற்றை தொடர்ந்து வாங்கி சாப்பிட முடியாத சூழல் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் சிலர் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் சாப்பிட்டு பிறகு நிறுத்திவிடுகின்றனர்.


இருப்பினும், அதிக விலை இல்லாமல் கிடைப்பதோடு, அதிக ஊட்டச்சத்துகளும் கொண்ட ஒரு பழம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழைப்பழம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பொதுவான பழமாகும். எளிதாக கிடைக்கும் இந்தப் பழத்தில் உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பலரும் வாழைப்பழத்தை காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் இயற்கை உணவாக கருதப்படுகிறது. தொடர்ந்து 45 நாட்கள் வாழைப்பழத்தை உணவில் சேர்த்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

100 கிராம் பழுத்த வாழைப்பழத்தில் கலோரிகள் 89 kcal, கொழுப்பு 0.33 கிராம், சோடியம் 1 மில்லிகிராம், கார்போஹைட்ரேட் 22.8 கிராம், நார்ச்சத்து 2.6 கிராம், புரதம் 1.09 கிராம் மற்றும் பொட்டாசியம் 358 மில்லிகிராம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வாழைப்பழத்தில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. அதனால் உடற்பயிற்சிக்கு முன்பும் காலை உணவாகவும் இது பரவலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. வைட்டமின் B6 உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. அதேபோல் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும் செரோடோனின் சுரப்பை தூண்டவும் வாழைப்பழம் உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் செல்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. மேலும் செரிமானத்தை சீராக வைத்திருக்கவும் பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மொத்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்த அழுத்த கட்டுப்பாடு, செரிமான மேம்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பலனளிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Also Read: மறந்தும் கூட இந்த துணிகளை வாஷிங் மெஷினில் போடாதீங்க… மெஷின் வேஸ்ட் ஆகிடும்!

Saranya

Next Post

இதை மட்டும் சேருங்க, சாதாரண தோசையை சத்தான தோசையா மாற்றலாம் – பிரபல மருத்துவர் டிப்ஸ்!

Mon Jul 6 , 2026
பொதுவாக தமிழ்நாட்டில் காலை அல்லது இரவு உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசை தான். இதில் இட்லி சிலருக்கு அதிகம் விருப்பமில்லை என்றும், உடல்நிலை சரியில்லாத போது மட்டும் சாப்பிடும் உணவாகவே பலர் கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலான வீடுகளில் தோசை தான் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. தோசை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான உணவாக இது உள்ளது. ஆனால், தோசையில் அதிகளவில் ஊட்டச்சத்து […]
Dosa 2026

You May Like