1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ இது கட்டாயம்…! தமிழக அரசு முக்கிய உத்தரவு…!

இரண்டாம்‌ பருவத்திற்கான எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து 1 முதல்‌ 5 வகுப்புகள்‌ கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ இரண்டாம்‌ பருவத்திற்கான பயிற்சிகள்‌

2022-2023-ம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 3 வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்வியியல்‌ ஆராயச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மூலம்‌ முதல்‌ பருவத்திற்கான தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ கணிதப்‌ பாடத்திற்கு பாடபொருள்‌ உருவாக்கப்பட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகளின்படி,, இரண்டாம்‌ பருவத்திற்கான எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து 1 முதல்‌ 5 வகுப்புகள்‌ கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ இரண்டாம்‌ பருவத்திற்கான பயிற்சிகள்‌ மாநில மற்றும்‌ மாவட்ட அளவில்‌ வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ கணித பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 18% பொறியியல்‌ கல்லூரி திருச்செங்கோடு, நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ 19.09.2022 அன்று தமிழ்‌ பாடத்திற்கும்‌, 20.09.2022 அன்று ஆங்கிலப்பாடத்திற்கும்‌, 21.09.2022 அன்று கணித பாடத்திற்கும்‌ பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில்‌ முதன்மை கருத்தாளார்களாக செயல்பட உள்ளவர்களின்‌ பெயர் பட்டியல்‌ பாடவாரியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும்‌ அட்டவணையில்‌ பெயர்‌ குறிப்பிட்டுள்ள ஆசிரியர் மற்றும் பயிற்றுநர்கள் அவரவர் பாடத்திற்குரிய பயிற்சி நாட்களில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மிக கொடூரம்... பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை...! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு...!

Sat Sep 17 , 2022
மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் உத்தரவு போது தனது மைனர் மகளை பலமுறை பலாத்காரம் செய்த 44 வயது தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்த திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி […]

You May Like