தொடங்கிய தீபாவளி… இந்த தவறை செய்தால் அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு…! எல்லாம் கவனமாக இருங்க…!

அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள். வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினமான இன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இதனை மீறி பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் உஷாராக பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து தீபாவளியை ஆபத்தில்லாத வகையில் கொண்டாட வேண்டும்.

Vignesh

Next Post

TNPSC-யில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...! வெளியான சூப்பர் அறிவிப்பு...!

Sun Nov 12 , 2023
அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தேர்வு தேதியை அறிவித்துள்ளது. தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை – 3ல், 7 மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் பதவியில், நான்கு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொழில் முதலீட்டு கழகத்தில் நிதி பிரிவு அதிகாரி, 27; […]

You May Like