மனசு நோகுதய்யா.. MGR உருவாக்கிய இயக்கத்திற்கு இந்த கதியா..? அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை வேதனை..!

semmalai

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனக்கு பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் கூறிய அவர், கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கிவிட்டது. இதே மனநிலையில் தான் இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள். நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது.

எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதா காப்பாற்றிய இந்த இயக்கத்திற்கு இந்த கதியா? கற்பூரம் கரையலாம், கட்சி கரைலாமா! நோகுதய்யா மனசு நோகுதய்யா என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும். “உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது” என பிரபல ஆங்கில் நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீதாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள்.

அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்பட வேண்டும் என்ற சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு , எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தடுக்கப்பட்டன. அதை பற்ரி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

மறைந்த ஆளுமைமிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியல் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன், இப்போது உருவாக்கியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிற போது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது. எவ்வளவோ வாய்ப்புகளை வழங்கியதோடு அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்பதை தலைமைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Read more: கேரளாவிலும் கால்பதிக்கிறதா தமிழக வெற்றிக் கழகம்..? தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்தும் விஜய் அலை..!

English Summary

Former Minister Semmalai leaves AIADMK..!

Next Post

தமிழ்நாட்டை ஆள்வது திமுக தான்..! இன்ஸ்டா மூலம் ஆட்சிக்கு வந்துள்ளனர்..! மு.க. ஸ்டாலின் பேச்சு..!

Mon May 18 , 2026
"There is no need for us to be saddened by our defeat in the election; after all, it is we who are currently in power," stated DMK President M.K. Stalin.
mk stalin

You May Like