ஃப்ரிட்ஜில் தயிரை எத்தனை நாட்கள் வைக்கலாம்? எப்போது விஷமாக மாறும்? இல்லத்தரசிகளே உஷார்!

curd with salt

இந்தியர்களின் அன்றாட உணவு முறையில் தயிர் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய உணவாக விளங்குகிறது. புரதம், கால்சியம் மற்றும் குடல் இயக்கத்திற்கு நன்மை பயக்கும் நல்ல பாக்டீரியாக்கள் தயிரில் நிறைந்துள்ளதால் அனைத்து பருவ காலங்களிலும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். இருப்பினும் வீட்டில் தயாரிக்கும் தயிரையோ அல்லது கடைகளில் வாங்கும் தயிரையோ குளிர்சாதன பெட்டியில் எத்தனை நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. வீட்டில் தயாரிக்கும் தயிரை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிகபட்சமாக 6 முதல் 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம். எனினும் நீண்ட நாட்கள் வைக்கும்போது அதன் இயற்கையான சுவை மாறி அதிக புளிப்புத்தன்மை ஏற்பட்டுவிடும் என்பதால் விரைவாக உட்கொள்வதே சிறந்தது.


அதேபோல் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் தயிரில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதி வரை மட்டுமே அதனை பயன்படுத்த வேண்டும். பொதுவாக பாக்கெட் தயிர் 5 முதல் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்றாலும், காலாவதி தேதி முடிந்த பின்னர் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட தயிர் கெட்டுவிட்டதா என்பதை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன.

தயிர் வழக்கத்திற்கு மாறாக அதீத புளிப்பு சுவையுடன் இருத்தல், கடுமையான துர்நாற்றம் வீசுதல் போன்றவை கெட்டுப்போனதற்கான அறிகுறிகளாகும். மேலும் தயிர் தனது வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறினாலோ அல்லது அதன் மேல் பூஞ்சை படிந்திருந்தாலோ அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

தயிரை நீண்ட நாட்களுக்கு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டுமென்றால், அதனை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைக்க வேண்டும். தயிரை எடுக்கும்போது ஈரமில்லாத, காய்ந்த சுத்தமான கரண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல் தயிர் பாத்திரத்தை நீண்ட நேரம் வெளியே திறந்து வைக்காமல், தேவையான அளவு மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு உடனே ஃப்ரிட்ஜில் வைப்பது அதன் தரத்தை பாதுகாக்க உதவும்.

Read More : தங்கம், வெள்ளி விலை மேலும் உயருமா? இறக்குமதிக்கு ஜிஎஸ்டி விதித்த மத்திய அரசு! நகைப்பிரியர்கள் ஷாக்!

Next Post

சந்தை வீழ்ச்சியிலும் நஷ்டமில்லாத வருமானம்! முதலீட்டு ஆபத்தை குறைக்கும் ஸ்மார்ட் உத்தி!

Sun Oct 11 , 2026
முதலீட்டு உலகில் பணத்தை பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் வளர்க்க உதவும் ஒரு பிரதான உத்தியாக “அசட் அலகேஷன்” (Asset Allocation) திகழ்கிறது. ஒரு முதலீட்டாளர் தனது சேமிப்பு அல்லது முதலீட்டு நிதியை ஒரே இடத்தில் முடக்கி வைக்காமல் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் ரொக்கம் போன்ற பல்வேறு துறைகளில் பிரித்து முதலீடு செய்வதே அசட் அலகேஷன் எனப்படும். ஒரே துறையில் மட்டுமே முதலீடு செய்யும்போது சந்தை வீழ்ச்சி […]
money 1 e1765948687998

You May Like