#Flash: ஒரே நாளில் 20,528 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…! உயிரிழப்பு எண்ணிக்கை 49ஆக உயர்வு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,528 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 49 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,790 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,37,50,599  கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,30,81,441   பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,709 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,99,98,89,097 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25,59,840 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: தமிழகமே… கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை…! நாளைக்குள் இதை செய்யவில்லை என்றால் பணம் கிடையாது…!

Vignesh

Next Post

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன அறிவுரை..!

Sun Jul 17 , 2022
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தோல்வி பயத்தால், தங்கள் உயிரை மாய்த்து கொள்வது தீர்வாகாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டமான ’ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் திட்டம்’ சென்னையில் உள்ள 8 இடங்களில், ஒரு வருடத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதன் நிகழ்ச்சி சென்னை அண்ணா நகர் 2-வது அவென்யூவில், உள்ள பிரதான சாலை 800 […]
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையா..?? அமைச்சர் சொன்ன மிக முக்கிய தகவல்..!!

You May Like