ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தென்னிந்திய திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ’தாதா சாகேப் பால்கே விருது’ கருதப்படுகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், வினோத் கன்னா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தென்னிந்திய திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் 1960, 1970-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஆஷா பரேக். குஜராத்தைச் சேர்ந்த இவருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். 1952 முதல் 1999 வரை திரைத் துறையில் நடிகையாகப் பணியாற்றினார். 1992-இல் ஆஷா பரேக்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.