நடிகை வீணாகபூர் இவருக்கு வயது 74 இவர் பல ஹிந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பிரபலமாக நடித்து வந்தவர்.இவர் மும்பையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி அதில் தங்கி உள்ளார்,இந்த நிலையில், வீணா கபூரின் சொந்த மகனே அவரை அடித்து கொடூரமாக கொலை செய்ததாக காவல்துறை கூறியுள்ளது,
வீணா கபூரின் பெரிய மகன் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு பலமுறை கால் பண்ணியுள்ளார். ஆனால் வீணா கபூர் கால் அட்டென்ட் செய்யாத நிலையில், அவர் அவருடைய குடும்பத்தினர்களுக்கு போன் செய்து வீணா கபூரின் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்,அங்கு சென்று அவர்களது குடும்பத்தினர் பார்த்தபோது, அவர் வீட்டில் இல்லை, இதனையடுத்து அவர்கள், காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளனர்,
இதனைத் தொடர்ந்து காவல்துறை வீணா கபூரின் கடைசி மகனான, சச்சின் என்பவரிடம் மற்றும் அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர்,இந்த நிலையில், வீணாக்கபுரின் கடைசி மகன் சச்சின் விசாரணையின் போது காவல்துறையிடம் சரியான ஒத்துழைப்பு கொடுக்க மறுத்திருக்கின்றார்,
இதனால் சந்தேகமடைந்த காவல்துறை சச்சினை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்துள்ளனர்,இந்த விசாரணையில் சச்சின் தனது தாயை அவரே அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
,
அதில் சச்சின் கூறியதாவது, தன்னுடைய தாய் வீணா கபூருக்கு மும்பையில் 12 கோடி ரூபாய் ரூபாயில் பிளாட் இருப்பதாகவும், அதை தன் பேருக்கு மாற்றி எழுதிக் கொடுக்கும் படியும், கேட்டுள்ளார். வீணாகபூர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார், இதனால் இருவருக்குள்ளும் சண்டை உருவாகி உள்ளது,
இதில் கோபமடைந்த சச்சின் அவருடைய பேஸ் பால் பேட்டால் தலையில் அடித்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த வீணா கபூர் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்,
பின்பு சச்சின் வீணாக்கபூரை ஒரு பெட்டியில் போட்டு அவர்களின் வீட்டின் தொழிலாளரின் உதவியுடன் அவருடைய காரில் பெட்டியோடு கொண்டு சென்று வைத்து காரை வெகு தூரம் ஓட்டிச் சென்று வீட்டிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆற்றில் பெட்டியோடு வீசியதாகவும் மும்பை காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளார்,
இதைத்தொடர்ந்து மும்பை காவல் துறை சச்சின் மற்றும் அவர் வீட்டு தொழிலாளரான சோட்டு மண்டல் என்பவரையும் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மும்பை நீதிமன்றம் வரும் 19ஆம் தேதி வரை இவர்கள் இருவரையும் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது,சொத்திற்காக சொந்த மகனே தன் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.