இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, […]
ஆடி மாதம் தொடங்கி சில நாட்கள் தான் ஆனது போல் தோன்றினாலும், அதற்குள் ஒரு மாதம் முடியப்போகிறது. தினமும் பண்டிகைகள், அம்மன் கோவில்களில் விழாக்கள், வழிபாடுகள், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என அனைத்தும் வேகமாக வந்துவிட்டது போலத்தான் உணரப்படுகிறது. ஆனால் சிலர் வேலை, குடும்பச் சுமைகள், உடல்நிலை அல்லது நேரப்பற்றாக்குறை காரணமாக பெரிதாகக் கொண்டாட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள், ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த […]
ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், நாடு சோசலிசப் பாதையில் முன்னேறியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்கால இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தன. நாடு 1947 இல் சுதந்திரம் பெற்றது, அதன் பிறகு வளர்ச்சியின் பல பரிமாணங்கள் காணப்பட்டன. நேரு சகாப்தம் முதல் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சி வரை, பின்னர் பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் தாராளமயமாக்கல் மற்றும் இன்றைய “புதிய இந்தியா” பற்றிய தொலைநோக்கு, ஒவ்வொரு சகாப்தமும் அதன் […]
நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தேசிய தலைநகரான டெல்லி செங்கோட்டையில் இன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், […]
தமிழகம் முழுவதும் இன்று 12,525 கிராமங்களில் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், […]
குவைத்தில் விஷ சாராயம் குடித்து ஆசிய வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிளாக்கில் மதுவிற்பனைக்கு பெயர்பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4-ல் ஏராளமானவர்கள் மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில், மெத்தனால் கலந்த மதுபானங்களை விற்பனை […]
வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ”கூலி” படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”கூலி”. இப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை […]
தூய்மை பணியாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். தற்போது அவர்களை சமாதானப்படுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். ஆம்பூரில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தூய்மை பணியாளர்கள் சென்னையில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதே தி.மு.க தலைவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, […]
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை நாடு தனது 79 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இன்று நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது.. ஆனால் இந்தியாவில் 2 மாவட்டங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை.. அதற்கு பதில் 2 நாட்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 18 ஆம் தேதி […]
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருவரும் இன்று (ஆக. 15) அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்து பேச உள்ளனர். ‘நேட்டோ’ எனப்படும், சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது. இதில் உக்ரைன் இணைந்தால், தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து எனக்கூறி உக்ரைனுக்கு எதிராக, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரினால் […]

