ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆக செய்துள்ளது. […]

தற்போது நிலவும் அதிகக் குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ (Facial Paralysis) எனப்படும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிவகங்கை அரசுப் பொதுநல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார். முகவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். முகவாதம் என்றால் என்ன? முகத்திற்கு உணர்வை அளிக்கும் முக நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி அல்லது வைரஸ் தொற்று போன்றவற்றால் உருவாகும் பாதிப்புதான் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினின் இரண்டு நாள் இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடி அவருக்கு பகவத் கீதையின் பிரதியை அவருக்கு பரிசளித்தார். ஜனாதிபதி புடினுக்கு வழங்கப்பட்ட பிரதி ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை ஜனாதிபதி புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.. விமான […]

பலர் வீட்டில் கேமராக்களை பாதுகாப்பு காரணங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருப்பது போன்ற சூழலில் கேமரா பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த கேமராக்கள் பாதுகாப்பை கொடுக்க வேண்டிய இடத்தில், எதிர்பாராத முறையில், சட்டவிரோத உள்ளடக்கங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.. தென் கொரியாவில் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள சுமார் 1,20,000 கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் படங்களை திருடி, சட்டவிரோதமாக படமாக்கப்பட்ட பாலியல் சுரண்டல் […]

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணியின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மூதாட்டி ஒருவரை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வசிக்கும் சரோஜா என்ற மூதாட்டியின் வீட்டை ஒட்டியே சாலை அமைக்கத் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது, மூதாட்டி சரோஜா, […]