உள்ளங்கை திடீரென அல்லது தொடர்ச்சியாக சிவந்து காணப்படுவதை பலர் சாதாரணமான சரும மாற்றமாக கருதி அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், ‘பால்மர் எரிதீமா’ (Palmar Erythema) என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் இந்த உள்ளங்கை சிவத்தல், உடலின் உட்புறத்தில், குறிப்பாகக் கல்லீரலில் ஏற்படும் நாள்பட்ட பாதிப்புகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் அறுவைசிகிச்சை இரைப்பைக் குடலியல் துறைத் தலைவர் டாக்டர் டி.எல்.வி.டி. பிரசாத் பாபு […]
வேலைப்பளு நிறைந்த காலையையோ அல்லது தூக்கமில்லாத இரவையோ கழித்த பிறகு, மதிய வேளையில் சிறிது நேரம் தூங்குவது பலருக்குப் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தருகிறது. 10 முதல் 30 நிமிடங்கள் வரையிலான குறுகிய நேரத் தூக்கம் கவனச்செறிவை அதிகரிக்கும் என்றாலும், தினசரி நீண்ட நேரம் தூங்குவது அல்லது தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்வது உங்களின் உடல் கேட்கும் உதவியின் சமிக்ஞையாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து […]
சிவபெருமானின் வழிபாட்டில் வில்வ இலைகளுக்குதனித்துவமான முக்கியத்துவம் உண்டு. சிவலிங்கத்தின் மீது புனிதமான மூன்று இலைகள் கொண்ட வில்வத்தை படைக்காமல் எந்தவொரு சிவ பூஜையும் முழுமையடையாது என்று கூறப்படுகிறது. இந்த இலைகளின் ஆன்மீக முக்கியத்துவத்தை பக்தர்கள் நன்கு அறிந்திருந்தாலும், வில்வ இலைகளைப் பறிப்பதற்கான சரியான நேரம் குறித்து இந்து சாஸ்திரங்களும் மரபுகளும் சில விதிமுறைகளை வகுத்துள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. பொதுவாகப் பக்தர்கள் புனிதமான ஷ்ராவண மாதத்திலும், சிவபெருமானுக்கு உகந்த பண்டிகை […]
டெங்கு கொசு ஒழிப்பு மருந்து அடித்தபோது, மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி சாலை உப்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மோகன். அதே பகுதியில் ராணி என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து […]
தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தொகுதி மறுவரையறை […]
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அவர், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து […]
முதல்வர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களும் கேள்விகளும் இணையத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. முன்னதாக, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை, கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அம்மனு முடித்து வைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. கணவருடன் இணைந்து வாழ முடியாது என்ற […]
தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசின் வருகைக்கு பிறகு, மாநில அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எதிர்காலத்தில் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலா வந்தன. இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி சோமு, “அரசியலில் […]
உலக அளவில் முன்னணி ஆன்லைன் வீடியோ தளமாக திகழும் யூடியூப் (YouTube), பொழுதுபோக்கு, கல்வி, செய்தி, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் வருமானம் ஈட்டவும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், யூடியூப் நிறுவனம் தனது ‘யூடியூப் பார்ட்னர் புரோகிராம்’ (YouTube Partner Program) தகுதி விதிகளில் மிக முக்கியக் கெடுபிடிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் […]
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், இரு மாநில தரப்பு வாதங்களும் விரிவாகக் கேட்கப்பட்டன. முடிவில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 11,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது நாளொன்றுக்கு தோராயமாக […]

