அன்புக்குரிய ஒருவர் உயிரிழந்த பிறகு, அவரை கனவில் காண்பது போன்ற அனுபவங்களை சிலர் தங்களது துக்கத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வது உண்டு. ஆனால், இதுபோன்ற நம்பிக்கைகள் தீவிரமான மனவேதனையுடன் இணைந்தால் எதிர்பாராத விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு ஆந்திராவில் நடந்துள்ள சம்பவம் சோகமான உதாரணமாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரம் அருகே உள்ள பத்துங்க பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் ராவ் (32). மாற்றுத்திறனாளியான இவருக்கும், அதேபோல் மாற்றுத்திறனாளியான சியாமளா […]

செல்லப்பிராணிகள் மீது பிரபலங்கள் பலரும் தனி அன்பு காட்டுவது வழக்கம். அந்த வகையில், செல்லப் பூனையை ஆசையாக வளர்த்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன், உடல்நலப் பிரச்னை காரணமாக அதனை அதன் பழைய உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்புடன் பாடலிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தமிழ், […]

இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழு, இதற்கான காரணங்களைக் கண்டறிய நாடு தழுவிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 177-வது அறிக்கையில், சிறுநீரக நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வெப்ப அழுத்தம், தொடர்ச்சியான நீர்ச்சத்து குறைபாடு, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, அசுத்தமான […]

காரில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் டிராலி பேக்கில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு தலைமறைவானதாகக் கூறப்படும் பெண்ணின் காதலனைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சோடிகுமாரிக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரிஷப்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் […]

விழுப்புரத்தில் விவாகரத்தான மனைவி மீது முன்னாள் கணவர் பட்டப்பகலில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீச்சில் பெண் மற்றும் சாலையில் சென்ற முதியவர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய முன்னாள் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் – அன்புராணி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட […]

எங்களது கோரிக்கைகளை டிரம்ப் ஏற்கவில்லை என்றால் 2029 வரை ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, முக்கிய கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை (ஜனவரி 20, 2029) அமெரிக்க நிர்வாகத்துடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து […]

அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செல்லும் ஏழை, எளிய மக்களுக்கு, சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் எதிர்பாராத உடல்நலப் பிரச்னைகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், கோவையில் ரத்தம் ஏற்றப்பட்ட பின்னர் தனது மகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகக் கூறி, பல ஆண்டுகளாக போராடி வரும் தந்தை ஒருவர் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் காடாம்பாடியைச் சேர்ந்த தந்தை […]

குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 28 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கணவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி வெற்றிச்செல்வி, 28. இந்த தம்பதிக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தி, மக்களுக்கு எளிதில் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில், அம்மாநில அரசு ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ என்ற புதிய வசதியை ராய்ப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதைப் போல, ரேஷன் அட்டைதாரர்கள் இனி மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையின்றி, 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தானியங்களை இச்சேவை மூலம் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். சுமார் 2,500 கிலோ […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்திற்கு (FCRA) எதிராகவும் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முக்கியத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவற்றுடன் சேர்த்து, நடப்பு கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்களான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களும் இன்றைய பேரவைக் கூட்டத்தில் நடைபெறுகின்றன. மருத்துவக் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியான […]