மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு அமல்படுத்தப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பித்தார். கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் […]

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரை 23.09 லட்சம் பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. 01.12.2025 நிலவரப்படி 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்து அவர்களில் 23.09 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, […]

நடப்பு நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு ‌ உஜ்வாலா திட்டம் (பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா – PMUY) என்பது, இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு, இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்குவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும், இதன் முக்கிய நோக்கம், சுத்தமான சமையல் […]

பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குபவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான தளம். நாடு முழுவதும் இலவச சட்ட உதவிச் சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி, இலவச சட்ட சேவை கலாச்சாரத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, 2017-ம் ஆண்டு நியாய பந்து (புரோ போனோ) எனப்படும் இலவச சட்ட சேவைத் திட்டத்தை அரசு தொடங்கியது. இது சட்ட சேவைகள் சட்டம் -1987-ன் பிரிவு 12-ன் கீழ் இலவச சட்ட உதவியைப் […]

வெள்ளிப் பொருட்களுக்கு கட்டாய ஹெச்யுஐடி (பிரத்தியேக ஹால்மார்க் அடையாள எண்) திட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முதல் மூன்று மாதங்களுக்குள், 17 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் இந்தப் பிரத்தியேக எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது நகைக்கடைக்காரர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் வலுவான வரவேற்பைப் பிரதிபலிக்கிறது. வெள்ளிப் பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் திட்டம் தன்னார்வமாக இருந்தாலும், ஹால்மார்க் செய்யப்பட்ட எந்த வெள்ளிப் பொருளுக்கும் ஹெச்யுஐடி எண்ணைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஹால்மார்க் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் கிட்டத்தட்ட […]

நாடு முழுவதும் புதிய சுங்கக்கட்டணம் முறை நாடு முழுவதும் அமலாகிறது என்ற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர் “ புதிய சுங்கக்கட்டண முறை தற்போது 10 இடங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.. இது ஒரு ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்த புதிய முறையால், வாகனங்களை நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பழைய முறை முடிவுக்கு வரும். […]

திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு கை வைத்துள்ளது. இனிமேல் திமுக அரசு இருக்கவே இருக்காது. தீபம் ஏற்றும் வரை போராடுவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து ஆட்சியரின் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு வந்த மனுதாரர் உள்ளிட்டோரை மாநகர போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பினர். நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்காத போலீஸாரை கண்டித்து […]

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்றுமுன்தினம் வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக பகுதிகளில், […]