மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்திருப்பது துரோகத்திற்கான இடைக்கால வெற்றியே தவிர வேறொன்றுமில்லை; குறுகிய காலத்திலேயே கட்டமைக்கப்பட்ட தவெகவின் பொய் பிம்ப அரசியல் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிந்து 5 மாதங்களுக்குள் இரு சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் ஆளுங்கட்சி தங்கள் […]
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல் அபார வெற்றி பெற்றனர். தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ”மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. ஒரு பைசா […]
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் 2 தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில், த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆரம்பம் முதலே அசைக்க முடியாத முன்னிலை பெற்று வந்தார். இறுதிச் சுற்று முடிவில் அவர் 61,470 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை […]
காலையில் கண் விழித்தவுடன் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்றும், உணவுக்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றும் சமூகத்தில் பரவலான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஆனால், இவற்றில் எது அறிவியல் உண்மை, எவை தேவையற்ற மிகைப்படுத்தல்கள் என்பது குறித்துக் கொச்சி ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையின் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் வினோத் சேவியர் விரிவான மருத்துவ விளக்கங்களை அளித்துள்ளார். காலையில் எழுந்தவுடன் […]
ஒரு மொறுமொறுப்பான தோசையை விரும்பாத உணவுப் பிரியர்களே இருக்க முடியாது. பொன்னிறத்தில் வெந்துவரும் மேற்பகுதி, உள்ளே சுவையான உருளைக்கிழங்கு மசாலா, பக்கத்தில் மணக்கும் தேங்காய் சட்னி மற்றும் சுடச்சுட சாம்பார் ஆகியவை சாதாரண காலை உணவை ஒரு அற்புதமான விருந்தாக மாற்றிவிடும். இந்நிலையில், நம் தென்னிந்தியாவின் இந்த சிறப்பு உணவு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அப்பால் உள்ள அமெரிக்காவின் சீட்டில் (Seattle) நகரத்தில் மக்களின் மனங்களை வென்றுள்ளது. கூகுள் […]
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக, ஈரான் மீது புதிதாக ராணுவத் தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது […]
வீட்டுக் கடன், கார் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கியிருப்பவர்கள், மாதத் தவணை (EMI) மற்றும் மொத்த வட்டிச் செலவு குறித்து கவனமாகத் திட்டமிடுவது அவசியம். வட்டி விகிதம் உயரும்போது, கடனுக்கான மாதத் தவணை அதிகரிக்கலாம் அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்படலாம். இதனால் நீண்ட காலத்தில் கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். கடனின் சுமையைக் குறைக்க, மாதத் தவணையைச் சற்றே அதிகரிப்பது, அவ்வப்போது அசல் […]
‘நேச்சர் மெடிசின்’ (Nature Medicine) இதழில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய உலகளாவிய ஆய்வில், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமான வலி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக முழுவதும் 118 நாடுகளைச் சேர்ந்த 61 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 11 உடல் உறுப்புகளிலும் பெண்கள் அதிக அளவிலான வலியைப் பதிவு செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதுடன், உலகளாவிய வலிச் […]
வங்கியில் ஒரு சேவையைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறீர்களா? பணம் அனுப்பியபோது கணக்கில் இருந்து தொகை கழிக்கப்பட்டும் பரிவர்த்தனை முடியவில்லையா? கடனை முழுமையாகச் செலுத்திய பிறகும் சொத்து ஆவணங்கள் கிடைக்கவில்லையா? இதுபோன்ற சில சூழல்களில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவையை முடிக்கத் தவறும் வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் இழப்பீடு பெற முடியும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிச் சேவைகளில் ஏற்படும் குறிப்பிட்ட தாமதங்களுக்கான காலக்கெடு மற்றும் இழப்பீட்டு விதிகளை வகுத்துள்ளது. எந்தெந்தச் சூழல்களில் […]
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் பெயரை, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். ஜேவர் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்துக்கு ‘நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம், நொய்டா–ஜேவர்’ எனப் பெயர் சூட்ட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விமான நிலையத் திட்டத்தை […]

