fbpx

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா..? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சாதிவாரி கணக்கெடுப்புக்காக, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரன் தலைமையில் முந்தைய அரசு ஆணையம் அமைத்தது. பிறகு, ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக, ஆணையத்துக்கு 6 மாதம் கூட கால …

திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? என திருச்சி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவினர் உருவ கேலி செய்த போது பாஜக தலைவர் தமிழிசைக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதனை திமுகவினர் கேலி …

தமிழக பாஜகவில் இருந்து இரண்டு மாவட்டத் தலைவர்கள் நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜகவில் இருந்து இரண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், …

இனியும் தாமதிக்காமல், மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதுதான், முதலமைச்சரின் ஒரே தார்மீகக் கடமையாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக அரசின் நடவடிக்கையால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் வெகுவாக குறைந்து விட்டதாக, தனக்குத் தானே பாராட்டு …

குடிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக கள்ளுக்கடைகளை தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் …

கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 38 பேர் உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் பாக்கெட், பாக்கெட்டாக சாராயம் …

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக …

நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை வந்ததுக்கு பிறகு பாஜக வளர்ச்சியடைவில்லை எனக் கூறினார்.

பாஜகவின் அகில இந்திய தலைமை, மாநிலத் தலைவரை அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கூறிய எஸ்.வி.சேகர், “டெல்லி தலைமை அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஒன்று உருவாக்கப்பட்டது. எல்லாமே “paid …

எக்ஸ் தளத்தில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது #GobackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. அவர் எப்போது தமிழகம் வந்தாலும் #GobackModi ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதேபோல், மித்ஷா வருகை தந்தபோது #GobackAmitshah டிரெண்டானது. திமுகவினர்தான் இதனை தீவிரமாக செய்ததாக …