fbpx

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் வேட்பாளரே இல்லாமல் வாக்கு சேகரித்தார்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வினோஜ் செல்வம் போட்டியிட உள்ளார், அவரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சூளைமேட்டில் நடந்த பரப்புரையில் தனியாகவே சென்று வேட்பாளருக்காக வாக்கு சேகரித்தார். ஜி.கே.வாசனின் பரப்புரையில் கலந்துகொள்ளாமல் …

ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் கோவை மக்களவைத் தொகுதியும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், …

தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி தன்னிடம் இல்லை என்பதால் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தான் நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்; மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி என்னிடம் இல்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தான் நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். …

காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் பா.ஜ.கவில் 27 ஆயிரம் பேர் இணைந்தனர்.

பாஜக மூத்த தலைவரும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான மாநில பொதுச் செயலாளருமான அசோக் கவுல், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் 27,000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது யூனியன் பிரதேசத்தில் கட்சியின் அடிமட்ட விரிவாக்கத்தை மேம்படுத்துகிறது என கூறியுள்ளார்.…

கர்நாடகா முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார்.

கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சித் தலைவரும், கங்கவாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி இன்று பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆகியோர் …

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். அண்ணாமலைக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் தங்களது பிரச்சாரங்களை தீவிர்படுத்தி உள்ளனர். மாற்றுக் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் தங்களை பாஜகவில் இணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் இராமநாதன் அவர்கள், பிரதமர் மோடி மீண்டும் …

மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய நிறுவனத்திடமிருந்து பாஜக(BJP) தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி பெற்றிருக்கிறது என ஆம் ஆத்மி(AAP) கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.

தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்த தகவல்களின்படி பாரதிய ஜனதா கட்சி(BJP) டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஒப்புதல் அளித்த நிறுவனத்திடம் இருந்து 52 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களின் மூலம் …

தமிழகத்தில் பாஜக கூட்டணி பெறப்போகும் வெற்றி, 1967ம் ஆண்டைப் போல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கலும் …

பாஜகவுடன் நேற்று நடைபெற்ற முதற்கட்ட தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று வருவதாக சொல்லிவிட்டு ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பாஜக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் தரப்புடன் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இன்று நடைபெறும் …

பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “நாங்கள் கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளனர். எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும். நான் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் …