fbpx

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக கூட்டணியுடன் கைகோர்த்துள்ள பாமக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தருமபுரியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்களும் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக …

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் சர்வே நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் கணிசமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்பதில் பாஜகவினர் உறுதியாக உள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டில் 19 தொகுதிகளிலும் பாஜக வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் பாஜகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து …

மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து …

பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து …

Kejriwal: கடந்த 21ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாத நிலையில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் அவரை வரும் ஏப்.15 வரை நீதிமன்றக்காவலில் திகார் ஜெயிலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் …

MI: அடுத்த ஆறு நாட்களில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறி இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்ததில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் தரப்பில் அதிருப்தி நிலவிவருகிறது. அதற்கு …

தமிழ்நாட்டில் அரிசி விலை குறைந்துள்ளதால், ரேஷன் கடைகளில் இனி எப்போதும் அரிசி தட்டுப்பாடு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாதங்களாகவே அரிசியின் விலை பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு காரணம், அத்தியாவசிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவரப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும், புயல், பருவமழை தவறியது போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவான காரணத்தினாலும் …

medicine: மருந்துகளின் விலை 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என்று வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஏப்ரல் 2024 முதல் மருந்துகளின் விலை 12 சதவீதம் வரை கணிசமான அளவில் உயரும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் …

Whats app: உலகளாவிய செயலிழப்பிற்குப் பிறகு மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பல கோடி கணக்கான மக்களின் தகவல் தொடர்பு சேவையில் முக்கிய பங்கு வகிப்பது வாட்ஸ் ஆப். இதில் குறுந்தகவல்களை அனுப்பும் வசதி, ஆடியோ கால், வீடியோ கால், ஆடியோ மெசேஜ் மட்டும் …

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புரட்சி பாரதம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. புரட்சி பாரதம் கட்சி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் …