fbpx

கோயமுத்தூர் மாவட்டம், ரத்தினபுரி அருகேயுள்ள ஆறுமுக கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் பூபாலன். இவர் கட்டிட கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பூபாலன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான சூலூரில் தங்கி, அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வாரம் ஒருமுறை ரத்தினபுரிக்கு வந்த […]

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை கண்டித்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார் (20). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரி (19). நிறைமாத கர்ப்பணியான சங்கரிக்கு, வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்துள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சங்கரி பிரசவ வலி ஏற்பட்டதால், பிரசவத்திற்காக […]

கடன் தொல்லையால் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் ஆட்டோ ஒட்டுநர் தியாகராஜன், அவரது மனைவி செல்வி, மகள் மற்றும் மகன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், தியாகராஜனுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சனை காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு முதல் […]

தமிழகத்தில் தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தராது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் மோடி தலைமையிலான அரசு, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும், வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற […]

கேரள மாநிலம் திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க்கின் அருகே காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன்பு நிர்வாணமாக நின்றதாக குழந்தைகள் கூறியுள்ளனர். ஆனால் குழந்தைகளால்அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. இதுபற்றி காவல் நிலையத்தில் குழந்திகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து […]

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் சிவலிங்கத்தை பற்றி தவறாக கருத்து கூறிய ஒருவருக்கு எதிர் கருத்தாக நபிகள் நாயகம் பற்றி கருத்துக்களை கூறிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல் கடைக்காரர் கடந்த 28-ந் தேதி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அமராவதி நகரில் மருந்து கடைக்காரர் இதே […]

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொரு துறை வாரியாக எவ்வளவு கோடி லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்ற அவர்களது ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என ஓபிஎஸ் அணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னையில் தற்போது நடக்கப்போவது பொதுக்குழு அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு துதிபாடும் குழுக் கூட்டம். பொதுக்குழு கடிதம் உண்மையாகவே கட்சியின் கடிதம்தானா அல்லது […]

கோவை சவுரிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். கனவருடன் கடையை நானும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறேன். எங்களது கடைக்கு போத்தனூரை சேர்ந்த சென்னை மற்றும் கோவையில் கட்டுமான […]

இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக மாற முடியாது என்று இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். காளி என்ற ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. அந்த படத்தின் போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது… இந்து கடவுளை அவமதிக்கும் வகையிக் இருப்பதாக கூறி பாஜகவினர் இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. […]

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. […]