fbpx

33 வயது பெண் ஒருவர் கட்டாய கருக்கலைப்பு தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு டெல்லியின் ஜீதாபூர் என்ற பகுதியில் அரங்கேறிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”உயிரிழந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாகவே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த […]

டெல்லி பல்கலை கழகத்திற்கு உட்பட்ட தொழில்முறை படிப்புகளுக்கான கல்லூரியில் (சி.வி.எஸ்.) அசிஸ்டன்ட் ப்ரொபசராக வேலை செய்பவர் மன்மோகன் பாசின். இவருடன் வேலை பார்க்கும் பெண் ப்ரொபசர்கள் பலர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் மன்மோகன் பாசினை சஸ்பெண்டு செய்ய டெல்லி பல்கலை கழகத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் யோகேஷ் சிங் அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பான கடிதம் எதுவும் தனக்கு வரவில்லை என பாசின் கூறியுள்ளார். எனவே, இதுகுறித்து சொல்வதற்கு […]

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை வெளியிடும்போது, என்ன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதையும் வெளியிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் தந்தையின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பட்டியல் ஒன்றை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டுள்ளார். அப்போது […]

கோவையில் ஒரு பிரைவேட் மில்லில் வேலை செய்யும் சிறுவன் ஒருவன், நேற்று முன் தினம் விடுமுறைக்காக தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு செல்ல, கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு பஸ் இல்லாததால் திண்டுக்கலுக்கு வந்துள்ளார். திண்டுக்கல் வந்து பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அந்த சிறுவனிடம் வந்து காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்று கூறி உதவி கேட்டுள்ளார். அந்த சிறுவனும் பணம் கொடுத்து உதவினார். அதை […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் காகர்லா உஷா, நந்தகுமார், அறிவொளி, எம்.எல்.ஏ., ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், […]

இலங்கையில் குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் எப்படி நாட்டை விட்டு சென்றுள்ளார்களோ, அதேபோல் விரைவில் இந்த திமுகவினரும் செல்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வருகை தந்துள்ளார். அவரை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையிலான அதிமுக-வினர் மேளதாளத்துடன் மலர்கள் தூவி உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு […]

சென்னை, மாமல்லபுரத்தில் வருகிற 28- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை 44 வது செஸ் ஒலிம்பியாட், 2022 வருடத்தின் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட விளையாட்டு […]

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. […]

அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம்; தனது செயலுக்கு ஓபிஎஸ், இ.பி.எஸ்ஸை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிபட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக […]

மும்பை, மலாடு ஹோட்டலில் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் உடல் மீட்பு மும்பை மலாடு பகுதியில் உள்ள அக்சா லாட்ஜில் நேற்று முன்தினம் ஒரு ஆணும் பெண்ணும் வந்து தங்கி இருந்தனர்.அந்த பெண் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த பெண்ணுடன் வந்த ஆண் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் […]