வரும் 22-ம் தேதி சென்னையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்படுகிறது.. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுவழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பரில் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தித்தாளில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது, ஏனெனில் அதன் மையில் பல பயோஆக்டிவ் பொருட்கள் இருப்பதால், எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களில் உணவை வைத்து சாப்பிடுவது என்பது ஆரோக்கியமற்ற பழக்கம். உணவு […]
சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் […]
தனியார் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு சட்டம் போல் விதிகளை உருவாக்கிட வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 17-ம் தேதி பள்ளிக்குள் சில சமூக […]
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், […]
தாழ்வழுத்த மின் கட்டணம்; தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42:19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 […]
பழம்பெரும் பின்னணி பாடகர் பூபிந்தர் சிங் நேற்று மாலை மாலை மும்பையில் காலமானார்.. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கோவிட் தொடர்பான சிக்கல்கள் காரணமாக திங்களன்று மூத்த பின்னணி பாடகர் பூபிந்தர் சிங்கை இசைத்துறை இழந்துள்ளது. அவருக்கு வயது 82. அவரது 50 ஆண்டு கால திரை வாழ்க்கையில், பூபிந்தர் இசைத்துறையின் மிகப்பெரிய ஜாம்பாவன்களான முகமது ரஃபி, ஆர்.டி.பர்மன், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே மற்றும் பப்பி லஹிரி போன்றவர்களுடன் பணியாற்றினார்.. […]
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார் சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று தெரிவித்தார்.. மேலும் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மத்திய அரசின் மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் […]
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து பள்ளியில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. ஆனால், அரசிடம் அனுமதி பெறாமல் […]
தமிழக மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மத்திய அரசின் மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் […]