சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் சாதி குறித்து தேர்வில் கேட்கப்பட்டது மன்னிக்கவே முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக […]
வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி, லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருந்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் உடனான தனது உறவு நிலையை லலித் மோடி அறிவித்தார்.. அவரின் பதிவில் “மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களின் உலக சுற்றுப்பயணத்திற்குப் பிறகு லண்டனுக்குத் திரும்பி […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 37,088-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்.. அவருக்கு வயது 69. வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.. வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார்.. […]
அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்ச ராஜினாமா செய்ததாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் […]
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,10,809ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 17,858 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி பொதுவாழ்க்கையில் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,038 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,994 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெயர் விராட் கோலி. அந்தளவுக்கு தனது அபார பேட்டிங்கால் இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து தந்துள்ளார். எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் பரவாயில்லை, கோலி நிலைத்து நின்றால் வெற்றி இந்திய அணிக்கு என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து […]
தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கனியாமூர் தனியார் பள்ளியில் […]
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 72,646 கனஅடியாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 81,930 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து […]