சேலம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமாகவும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் ஜீவநாடியாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையின்றி […]
கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்ற இந்த அமர்வில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது கடுமையான நிலைப்பாட்டைப் பதிவு செய்தது. அப்போது பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு எவ்வித இடமும் இருக்கக் கூடாது” என்று உறுதியாகத் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கான நிதியுதவி, ஆள்சேர்ப்பு, தீவிரவாதப் […]
சமூக வலைதளங்களில் பிரபலமான அமலா ஷாஜி, தற்போது வெள்ளித்திரையில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார். அதுவும் ஏற்கனவே பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இருவரும் இணையும் புதிய படத்துக்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் இது 26-வது படமாக அமைந்துள்ளது. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக […]
சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பெருங்காயம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனங்களின் குறிப்பிட்ட பெருங்காய தயாரிப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகள் பூர்த்தி செய்யப்படாதது ஆய்வில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. FSSAI மேற்கொண்ட ஆய்வில், எவரெஸ்ட் Food Products மற்றும் Laljee Godhoo & Co. நிறுவனத்தின் LG Brand Unit ஆகியவற்றின் குறிப்பிட்ட பெருங்காய […]
கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப் பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 1,003 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேபாளத்தில் மட்டும் 987 பேரும், திபெத் (சீனா) பகுதியில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,916 ஆகக் குறைந்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 275 குடிமக்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 128 பேரும் அடங்குவர். […]
தமிழகத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக மாற்றும் முயற்சியில் அடுத்தகட்ட நகர்வை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. ஏற்கனவே மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து புதிய முதலீடுகளை பெறும் நோக்கில் முதல்வர் விஜய் பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் இந்தப் பயணம் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விஜய் […]
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பணிநேர நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நேரக்கட்டுப்பாடு மற்றும் பணிச்செயல்பாடு, தலைமைச் செயலகத்தின் அன்றாட பணிச்சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் தனது அலுவல் பணிகளில் நேரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. காலையிலேயே […]
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.6.28 உயர்த்தியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் ரூ.115-லிருந்து ரூ.121.28 ஆக (5.46% உயர்வு) அதிகரித்துள்ளது. இந்தியாவில் விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் 35% முதல் 40% வரை விமான எரிபொருளுக்கே செலவாகிறது. எரிபொருள் விலை உயர்வதால் விமான நிறுவனங்களின் செலவு அதிகரிக்கும். எனினும், பயணிகளின் தேவை, நிறுவனங்களுக்கு இடையேயான […]
வெளிச்சந்தையில் ரூ.60 வரை விற்கப்படும் ஒரு பொருள், இனி ரேஷன் கடையில் வெறும் ரூ.15-க்கு கிடைக்கப் போகிறது என்ற தகவல் குடும்ப அட்டைதாரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்த விலையில் கோதுமை மாவை வழங்கும் புதிய முயற்சியை அரசு முன்னெடுக்க உள்ளது. தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் கோதுமை மாவை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. […]
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 950க்கும் அதிகமாக உள்ளது. மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் ஒரே வீட்டிற்குள் இருந்து 23 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. நுவாகோட்டின் பிதுர் நகராட்சிக்குட்பட்ட பெட்ராவதி கிராமத்தில், போதேகோஷி ஆற்றின் வெள்ளப் பெருக்கால் மூன்று மாடி வீடு ஒன்று முழுமையாகச் சேற்றில் புதைந்தது. […]

