முன்கூட்டியே இழப்பீட்டுத் தொகை”“பயிர் சேதம் தொடர்பான கணக்கெடுப்பின் படி இழப்பீடு வழங்கப்படும். ஜனவரிக்கு பதில் டிசம்பர் மாதம் முதல் இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்க உத்தரவு. 33% மேல் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கன மழையால் அறுவடைக்கு தயாராகி வரும் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட […]

தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைந்து வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. தமிழகத்தில் இலவச சைக்கிள் திட்டம் கடந்த 2001-2002-ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இது பின்னர் அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2025-26 கல்வியாண்டிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச சைக்கிள் திட்டம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்ய இருப்பதால், அந்தப் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026 ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. முறையான வாக்காளர் பட்டியல் […]

ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர்.1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1040-வது சதய விழா வரும் […]

திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ சந்திப்பு. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுகவும் தனது கூட்டணியை கடந்த 8 வருடமாக உடையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, […]

பலுசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தின் பாக் நகரில் நேற்றிரவு நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில், பல பயங்கரவாதிகள் காவல்துறை மற்றும் துணை ராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர், மேலும் பல அரசு கட்டிடங்கள் தீக்கிரையாகின. மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) மன்சூர் ரெஹ்மான் இதுகுறித்து பேசிய போது “ சுமார் 50 கனரக ஆயுதம் […]

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.. சம்பவம் நடந்து […]

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டது.. மேலும் மாநிலத்தை குற்றமற்ற மாநிலமாக மாற்றுவதாக உறுதியளித்தது. ஜன் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு […]

சென்னை மதுரவாயல் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் திரிபுராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரின் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, ரேபிடோ (Rapido) ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், கைது செய்யப்பட்ட ஓட்டுநர் அளித்த வாக்குமூலம், இச்சம்பவத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், அந்த இளம்பெண் தனது பயணத்திற்காக ரேபிடோ சேவையை நாடியுள்ளார். அவர் முதலில் பள்ளிக்கரணைக்குச் […]