தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. […]

கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என போற்றப்படுகிறது. இதனை மகா சஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி […]

ஜீவன் உத்சவ் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (LIC) வழங்கப்படும் ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இதை எடுத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறலாம். அதன் பங்குச் சந்தையில் எந்த ஆபத்தும் இல்லை. நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு திட்டவட்டமான வருமானம் கிடைக்கும். 90 நாட்கள் வயதுடைய குழந்தை முதல் 65 வயதுடைய மூத்த குடிமகன் வரை யார் வேண்டுமானாலும் இந்தக் கொள்கையை எடுக்கலாம். 5 […]

தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் கூடிய 3240 பார்கள் உள்ளன.. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.120 கோடி முதல் 130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது.. வார இறுதி நாட்களில் ரூ.140 கோடி முதல் ரூ.150 வரை உயரும். குறிப்பாக பண்டிகை காலங்களில் மது விற்பனை 15% அதிகரிக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் […]

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களுக்கு இன்று ‘அதி கனமழை’க்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறைக்குப் […]

சென்னையை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வள்ளலார் நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (43). இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே இருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பிரகாஷுக்கு வலது மற்றும் இடது கை மணிக்கட்டுகள், பின்பக்க கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு […]

கண் பார்வையை இழந்த நோயாளிகள் இப்போது மீண்டும் படிக்கவும், முகங்களை அடையாளம் காணவும், தினசரி வேலைகளைச் செய்யவும் முடிகிறது.. ஆமா. இது “பிரிமா சிஸ்டம் (Prima System)” எனப்படும் புதுமையான மைக்ரோசிப் மூலம் சாத்தியமானது. 5 ஐரோப்பிய நாடுகளில் 38 பேரை உள்ளடக்கிய ஒரு சர்வதேச பரிசோதனையின் பகுதியாக, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மைக்ரோசிப் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. பார்வையை மீட்டெடுத்த அதிசயம் ஒரு குறிப்பிடத்தக்க […]

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தின் சியோஹாரா பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல், கொலைத் திட்டம் வரை சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மொராதாபாத் நகரில் வாடகைக்கு எடுத்து ஒரு கடை நடத்தி வருவதால், மாதம் ஓரிரு முறை மட்டுமே அவர் […]