தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 -ன் படி […]

மகளிர் உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியை வீழ்த்தில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரதிகா மற்றும் […]

பீகார் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் மக்களை 40 வயதுக்கு முன்பே உயிரிழக்க செய்யும் மர்மநோய் ஒன்று கடுமையாக பாதித்து வருகிறது. பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் மக்கள், 40 வயதுக்கு மேல் வாழ்வது அரிதாக உள்ளது. சுமார் 250 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில், கடுமையான எலும்பு மற்றும் தசை வலி ஏற்பட்டு, படிப்படியாக பக்கவாதம் உண்டாகி, முன்கூட்டிய மரணம் ஏற்படுகிறது. 56 […]

நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை நேரடியாக டி.ஆர்.பாலுவிடம் குறுக்கும் விசாரணை செய்ய உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் […]

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சௌந்தர்யா, காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வளாகத்தில் உள்ள வாடகை வீட்டில், தினேஷ் என்பவரும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். வேலை தேடி வந்த இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இவர்களின் காதல் தெரிந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் இவர்களுக்குத் […]

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான விமலா (பெயர் மாற்றப்பட்டது) என்ற மென்பொருள் நிறுவன ஊழியர், கொரோனா காலகட்டத்தில், அதாவது 2021-ஆம் ஆண்டில் வேலையை இழந்துள்ளார். இதனால், நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். பின்னர், பாலியல் தொழிலில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியான போதிலும், சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டதால், தனது தோழி கீதா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரின் வழிகாட்டுதலில் […]

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ஆணுறை இல்லாமல் உறவு கொண்டு, தவறான மருத்துவ ஆலோசனையால் கருக்கலைப்பின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், தொழில் நிமித்தமாக ஃபரிதாபாத்திற்கு வந்துள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் அனில் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை […]