fbpx

வீடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தார்.…

நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைத்த குஷ்பு, சீமான் மீதான தனது புகார்கள் குறித்து ஏன் பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் …

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில், கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட்டை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரசும் தான். ஆனால், இப்போது நாடகமாடுகிறார்கள் என்று விமர்சித்தார்.

திமுக …

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையால் அமைச்சர் பணியை சரியாக செய்யவில்லை எனக் கூறி அவரை டிஸ்மிஸ் செய்து என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ திருமுருகனை புதிய அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசையை …

பங்காரு அடிகளாருக்கு பூ மாலை அணியும் வழக்கம் இல்லாததால், அவருடைய உடலுக்கு யாரும் மாலை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவில்லை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து …

நிஃபா வைரஸ் பரவல் எதிரொலியாக மாஹேவில் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியின் ஒரு பிராந்தியமான மாஹே, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு அருகே உள்ளது. ஆகவே, அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்திற்கு நிஃபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால் புதுச்சேரி அரசு மாநில எல்லைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. …

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நடந்த சம்பவம் உண்மைதான் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மக்களவையில் வியாழன் அன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா விவாதத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியப் பொருளாதாரம் எதிர்கால வளர்ச்சியை அடைய தனித்துவமான நிலையில் இருப்பதாகவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டைச் …

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மற்றும் ரூ.150 மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு …

புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் …

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் இருக்கின்ற இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விமான படையின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர், 1948, 1965, 1971 உள்ளிட்ட ஆண்டுகளில் நம்முடைய எதிரி நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் நாட்டை காப்பதற்காக இந்திய …