fbpx

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் …

உசிலம்பட்டி அருகே இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகன் ராமன். இவர், இந்திய இராணுவத்தில் தற்போது பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அதே ஊரைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம்பெண் …

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி …

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி, வெங்காயம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் குறைய தொடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரம் உச்சத்தில் இருந்த தக்காளி, ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய் வரை …

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரட்டை பயன்களை கொடுக்கும் கன்யாடன் என்ற காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி. (LIC) வழங்கி வருகிறது.

காப்பீட்டு சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தான் பலருக்கும் நம்பிக்கையான ஒன்றாக இருக்கிறது. எல்.ஐ.சி. பலவிதமான பாலிசிகளை வழங்கும் நிலையில், பெண் …

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலரை, பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக அடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்டம் பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிறார். இவர் களியக்காவிளை எல்லை சோதனைச் சாவடியில் பணியாற்றியபோது, மார்த்தாண்டத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், தன்னை …

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில், விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டு …

mpox disease: காங்கோ ஜனநாயகக் குடியரசில் “ஆபத்தான திரிபு” mpox நோய் பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, கடந்த 25ம் தேதி உலக சுகாதார அமைப்பு (WHO), ஆப்பிரிக்காவில் பரவும் mpox நோய்க்கு அவசரமாகத் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், அதன் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை …

தேசிய ஒலிபரப்புக் கொள்கை 2024-ஐ உருவாக்குவதற்கான உள்ளீடுகள்’ குறித்த பரிந்துரைகளை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குவதற்கு ட்ராய் சட்டம், 1997 பிரிவு 11-ன் கீழ் உள்ளீடுகளை வழங்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2023 ஜூலை 13 தேதியிட்ட கடிதத்தில் ட்ராய் அமைப்பை கேட்டுக்கொண்டது.…