ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்து பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை உட்கொண்ட மருத்துவரும் மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக கேசன் பார்மா என்ற நிறுவனத்தால் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு என்ற சேர்மம் கொண்ட இருமல் சிரப் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது நிதீஷுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் […]

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற […]

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்றில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணவன் ஜெகதீஸ் குர்ரே – மனைவி சிமாதேவியை (35) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த எஸ்டேட் குடியிருப்பில் இருவருமே கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிமாதேவியைக் காணவில்லை என்று அவரது கணவர் […]

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, சமீபத்தில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், வீட்டிற்கு வந்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, அதிர்ச்சி தகவல் வெளியானது. பொதுவாக […]

தேனி மாவட்டத்தை சேர்ந்த சக்ரவர்த்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, கொடைக்கானலின் மலைப் பகுதிக்குக் குடியேறினார். அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த சக்ரவர்த்திக்கு, ஸ்பென்ஸி ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஸ்பென்ஸிக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தபோதிலும், நாளடைவில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவசாயத் தோட்டங்களில் தனிமையில் சந்தித்து வந்தனர். நாட்கள் செல்ல […]