முதுபெரும் இடதுசாரித் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா முதுமை மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 102. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அதற்கான […]

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ஆம் தேதி துபாயில் துவங்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 26ஆம் தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் குஜராத்தை தோற்கடித்த தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 5-வது […]

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நிலவக்கூடும். பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இது, வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை […]

மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் வரத்து குறைந்துவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது. பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் போன்றவற்றை 5% ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியானதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள். தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி வெகுவாக குறைந்துவிட்டதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள். காவிரி நீர் பற்றாக்குறையால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது […]

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 30 குறைந்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,645-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் […]

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி உள்ளனர். ஏன் இன்னும் சொல்லப் போனால் சிறு குழந்தைகள் கூட இதற்கு அடிமை தான். காரணம் அவர்கள் போனைக் காட்டினால்தான் சோறு சாப்பிடுகிறார்கள். ஆய்வு ஒன்றில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 90 சதவீதம் பேர் செல்போனைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது. இப்படி சாப்பிட்டால் தான் அவர்கள் நிரம்ப சாப்பிடுகிறார்கள் என்று குழந்தைகளின் தாய்மார்கள் நினைக்கிறார்கள், ஆனால் இது எவ்வளவு பக்க […]

அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, […]

சமீபத்தில் ரயில்வே அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரே ரயில் நிலையம் ஒரே பொருள்’ திட்டம் நாடுமுழுவதும் 1037 நிலையங்கள் 1134 OSOP விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2022 – 23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் சார்பில் நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில், ‘ஒரு நிலையம் ஒரே பொருள்’ திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்ளூர் பொருட்களின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் இந்த திட்டம், கடந்த ஆண்டு […]

தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அனைத்து இடங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ள நிலையில், தற்போது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் சென்று […]

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்’ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத் துறை மின்னணு ஆயுட்கால சான்றிதழ் முறையை (டி.எல்.சி) ஊக்குவித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், பயோமெட்ரிக் கருவிகளைப் பயன்படுத்தி டி.எல்.சி.களை சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதார் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகார தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எந்த திறனறி செல்பேசியிலிருந்தும் எல்.சி.யை சமர்ப்பிக்க முடியும். இந்த […]