முதல்வர் விஜய் அடுத்த பாய்ச்சல்..!! பிரதமர் மோடிக்கு அவசர கடிதம்..!!

pm modi cm vijay n

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.


அந்த கடிதத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியமில்லை எனக் நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூஷன் தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிராக அமைந்துள்ள அந்த தவறான பதவலை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். காவிரியைக் நம்பியுள்ள கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேலமைந்துள்ள மாநிலங்கள் தன்னிச்சையாக அணை கட்ட முடியாது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட இயலாது. கீழ்மடை மாநிலங்களுக்குச் செல்லும் நீரின் அளவைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் பிற மாநிலங்களின் சம்மதமின்றிச் செயல்படுத்த முடியாது என்பதால், காவிரிப் பாசன மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மாநிலங்களின் உரிமைகளையும் காக்கும் வகையில் பிரதமர் மோடி இதில் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More : வயதுக்கு மீறிய எடை… கண்ணுக்கு தெரியாத ஆபத்து..!! குழந்தைகளை சைலன்ட்டாக தாக்கும் பிரச்சனை..!!

Next Post

இந்திய வரலாற்றிலேயே முதன்முறை..!! அனுமதி வழங்கியது மத்திய அரசு..!! வேலையை ஆரம்பித்த RBI..!!

Tue Jul 28 , 2026
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, […]
Money 2026

You May Like